உன் நினைவுகள் மழைத்துளிகளாக ஈரமாகி என் உடலெங்கும் ரணமாகின்ற...
வார்த்தைகளின் புதிர் வெளிகளில் சுடும் மணலில் கால்கள் பதிய மனம் வெட்கை அனலில் மறுபடியும் வனாந்தரங்களில் தொலைந்த எனது பழைய உடலைத்தேடி பயணிக்கினறன.....
பேசும் உன் ஒற்றை வார்த்தையில் புதிர் அவிழ்க்கமுடியாத ரணங்கள்... கவிதைகளின் வரிகளுக்குள்ளும் அடக்க தெரியாமல் யாரிடமும் நம் உறவைப் பற்றி பேச துணிவற்று தனித்து விடப்பற்ற தீவாக அழைகிறேன்..... "வெப்" கேமராவில் பதிந்த உன் கண்களில் காதலை அன்றி காட்சிகளை காண மறுக்கின்றன என் கண்கள்... நீ வெகுதூரத்தில்இருந்தாலும் மன சலனங்களில் ரோஜாக்களின் முற்களாகவும் மறுமுறைமல்லிகை பூக்களின் வாசனையுடன் என்ஒற்றை வாசலில் வந்து வந்து காத்திருக்கின்றாய்...
உன் நினைவுகள் பெருக்கெடுத்து இந்தமழை நாளில் உடலெங்கும்நதிகளை ஊற்றெடுக்கவைக்கின்றது... என்னைப்பற்றி என்ன தெரியும்என்ற உனது கேள்விகளும் என்னைப்பற்றிய ஏதுமற்ற உன் மன வெற்றிடமும் அருகிலே நம்மைசந்திக்க வைக்கும்கணனியும் இப்போதைக்கு நம்மை இனைக்கும்பதில்களாக இருந்தாலும் கடவுளின்கைரேகை மறுபடியும் ஓர் தனித்து விடப்பட்ட இரண்டு தீவகளை ஒன்றினைக்கும் விளையாட்டில் நாம ஏனோ கேள்ளிகளுடன் சந்தேகங்களையும் பேசி நடக்கின்றோம்... வாழ்கை ஒன்றும் பெரிதாகஇல்லாத போதும.. குற்றச்சாட்டுக்கள் ஏதுமற்ற என்அடையாளங்களில் நீயம்உன் செல்ல சிரிப்பும்நம் உலகத்தில் புன்னகையை புதிய திசைக்கு அழைத்து போனால்.... போதும்...
உன் வார்த்தைகளின் சங்கீதம் எதுவாகவும் இருக்கட்டும்ஆனால்... தற்சமயம்நான் வாசிக்கும் உன் புல்லாங்குழலின் ஆத்மீக ராகம் மட்டும் எனக்குள் இதுவரையும் இல்லாத ஒர்வர்ணஜால சிறகை தந்துள்ளது.. அது நம்பிகையையும் ஒளியையையும் எதிர்ப்பார்ப்பையும் என் வீதிகளில் வலம் வரசெய்துள்ளது... உன் கடுமையான வார்த்தைகளினால் என் மன கோலங்களை மனகோட்டையை மட்டும் தகர்த்தி விடாதே....? போதும்காதலின் மாய சுகம் இந்த ஜென்மத்தில் எனக்கு இவ்வளவுதான்என்று இறைவன் தீர்மானித்துவிட்டால் உன்னை இப்படியேநினைத்து உன் கவிதைகளில் ரசிகனாக காலத்தையும் காதலையும்நினைவுகளில் சுமந்துவாழ்ந்து விடுவேன் பெண்ணே...!
No comments:
Post a Comment