Friday, August 15, 2008

மழையின் வர்ணம்

...........................................................................
மழை நீர் வழிந்தோடும்

தெருவில் முனையில்

அவளின் முகம்

போகும்திசையறிந்து

மெதுவாக நடக்கிறேன்…
குடை பிடிக்காத

மழை நாளில்தான்

மழை மேல் இருக்கும்வர்ணம் பற்றிய

வாசனை என்னில் எழுகின்றது…
மற்றொரு பிரலயம் பெருகும்

நகரச் சாலையில்

ஒரு வழிபோக்கனின் பாடலைபோல்

அவரவருக்கானகாயங்களுடன்

தினமும் தரும் அலுவலக நியாயங்கள்…!


முறக்க முடியாதவள் பற்றிய

சோக பாடலின்

வரிகளில்கொஞ்சம் நேரம்

இடை தங்கி போகும்

வர்ண ஜால மனத்தை

எப்போதும் மாற்றிவிட

முடியாத படி

இசை தெருக்களில்

எனது உள்ளோடும்

நினைவை

இசைக்கின்றது

புரியாத பாடலின் தாளலயம்..!
மழையின் ருசியை

பருகி பருகி தினமும் குடைகளை

விட்டொழித்து

துள்ளிய பள்ளிக் காலங்கள்

மட்டும் ஆன்மாவின்

பாடலாக மழையை

மனதில் கரைக்கிறது…


நீரின்புனிதம் எல்லா வற்றையும்

விட பெரியது !
நீர் பெரியது

நீர் அன்புள்ளது

நீர் அருமையானது

நீர் இன்றி

அமையாது வாழ்வு..!


Wednesday, August 13, 2008

மாய நகரம்
இரயில்
வண்டிகளின்
தண்டவாளங்களுடன்
மட்டும்தான்
ஆன் பெண் உறவைபொருத்த முடிகிறது…

சமிக்ஞை விளக்குகளுக்கு
மத்தியில்அரை
போதையில்
சத்தியம்
செய்தவள்
இன்று
வோறொருவனுடன்
இனைகிறாள் பிரிவின் துயரம்
பற்றியபரிவுகளற்று….

எல்லா நகரங்களிலும்
கடத்தல்களும்
கற்பழிப்புகளும்
மோசடிகளும்வரும் முன்பு
தெரிவதில்லை…

எல்லா நகரங்களிலும்மயானத்தை
நோக்கியபாதையின்
முடிவடைவது மட்டும்தான்
இறைவனின் விதியாம் !

அலுவலக
வேலைகளில்
காதலை துறந்தவளின்அம்மாவை
பற்றிய
கவிதைகள்
மட்டும்
ஏனோ
பொய்களினால்
அடுக்கப்பட்ட
வார்தைகளில்
பருவங்களின்
கடைசி பள்ளதாக்கில்
வசிப்பவனின் இரவுகளில் உதிரும்
காமத்தை யார் அறிவார்…!
நானும்
என் நண்பனும்சென்ற ஜென்மத்தில்
சபிக்கப்பட்ட
பிறவிகள்
அதனால்தான்
பெண்சினேகம் இல்லாத
பேய்களின்
ராத்திகளோடு
கைகளில் நீளும்வெண் நிற
இரவுகளில்
பொழுதை புணர்ந்து
புணர்ந்து சரிகிறேன்…

....................................................................
வீட்டில் ------ 29.05.2008
--------

Saturday, August 2, 2008

வாசனை
.................................................................................
அவைகளை
தாண்டி
ஒரு கணம்
கூட
நடக்க முடியவில்லை என்னால்
கூந்தலை வருடும்
சங்கமித்தாவின்
மண்டப
இருட்டில் மழை ஈரம்
காயாத
உன் நிமர்ந்த
வாசனைதீராத
தாமரை
மொட்டுக்களை
நீ எனக்காக
எடுத்துக்கொள்ள
முழுவதுமாக
தயாராகி....எரியும்
காமத்தின்
தீராத தொண்டைக்
குழியில்
இறங்க
மறுக்கும்
உணவின் ரொட்டி
துண்டுடன்
எச்சில்களை
ருசிக்கும்
உதடுகளின் ஸ்பரிசம்
கரையாமல்
மனதில்
என்றும்அக்னியாய்

கொதிக்கும் எனது
தீராத
காயத்தின் உனது
காதல்களில் சங்கமங்கள்.....
நீ
மறுபடியும் என்
உதிர்ந்த வாழ்வை
பகிர்ந்துகொள்ள வர மாட்டாயா?
போஷிப்பதற்கு உணவும் குருதியும்
இல்லாமல்
வாழ்நாட்கள்
இசையற்று வரண்டது
இக்கனம் வரை…
உன்னுடன்
பகிர்ந்துகொள்ளாத
பருவங்களில்
வேதனை மட்டும் இல்லாது
அதிகாலை பனி மலர்களின்
கோலங்கள் போடும்
வாசலில்…

பஜனை பாடலின்
வரிகளில்…
ஒவ்வொரு பஸ் பயணத்திலும்…
உன்னால் அறிமுகமான
பேராதெனிய
நண்பனை
சந்திக்க செல்லும் போதெல்லாம்…
கூடவே நீ உனது
வாசனையை
இன்னும் என்னால்
மறந்துவிட முடியவில்லை!
ஒற்றை
வரியாவது பேசி
செத்துவிட்ட
ஆத்மாவின்
பாடலக்கு உயிர்பைதர மாட்டாயா?
ஒர் அன்பு வார்த்தை கூட
போதுமானது…

தொலை பேசியில்
நீ
வெறுக்கும்
நபராக நான்
உனது
நியாயங்கள்
எனது
இயலாமைகள் எல்லாம்
ஒரு கனவு
போல்
நடந்து விட்டன
நகரத்து
சாலைகளில்
ஒரு வழிப்போக்கனை
போல்
நீ எங்காவது
தென்படுவாயா
என்றே மனம் ஓடுகின்றது…
இருவருமே ஒரே நகரத்தில்
வாழ்வதாக
கேள்விப்படுவார்கள்
நீ எங்கும்
இல்லாது
நான் பொது
வழிகளில்
நினைவு பயணத்தின்
புழுக்கம்
தீராமல்
இன்னும் உன்னுடன்
வாழ்கிறேன்…!
.............................................................................


பேராதெனிய பல்கலைக்கழகவிடுதியில்


22.04.2007 மாலை: 07.00 மணிக்கு