Monday, October 24, 2011

Hindu Indian sikh girl turn to Lord Jesus Christ...Testimony of Salvation


பிரபலமான அமெரிக்க பாடகி யாஸ்மின் சூரியின் உயிருள்ள சாட்சி.
 இந்திய இந்து குடும்ப பின்னணில் வளர்ந்த இவர் இயேவை ஏற்றது எப்படி
என்பதை கூறுகிறார்....


Saturday, August 20, 2011

இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மைசகோ.வே.கைவல்யம் டேவிட்

'கிறிஸ்து இயேசுவிருலிந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது,'
பிலிப்பியர் 2:5
நாம் சிந்திக்கின்ற இந்த தலைப்பின் அடிப்படையில் அதாவது 'கிறிஸ்துவின் தனித்தன்மை' அவருடைய சிநதயை நோக்கும் போது நமக்கு விளங்கும் கிறிஸ்துவில் இருந்த சிந்தை என்ன? அதன் அடிப்படையில் ஆண்டவர் எப்படி தனித்தன்மை உள்ளவராக இருந்தார். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு நாம் எப்படி கிறிஸ்துவை கவனிக்க வேண்டும்? அதை குறித்தே நாம் சிந்திக்க போகின்றோம்.
கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு அந்த தெய்வீக சுபாவங்களுக்கு நம்மை அர்ப்பணிக்கா விட்டால், தேவனுக்காக எந்தவொரு பெரிய காரியத்தையும் இந்த பூமியில் செய்து விடவே முடியாது. ஒருவேலை மூன்று வருடங்களோ ஐந்து வருடங்களோ இந்த வேதாகம ஆராச்சிகளை செய்து வேத கல்லூhயிpல் படிப்பதினாலோ நாம் சாதித்து விட முடியாது. தனிப்பட்ட முறையிலே உண்மையான உள்ளத்தின் ஆழத்திலே ஆசையோடும் தாகத்தோடும், இந்த திருமறையிலே கிறிஸ்துவின் தனித்தன்மை என்ன என்பதை நீங்கள் கூர்ந்து கவனித்து உங்களை தேவனுக்கென்று அர்ப்பணித்தால் நிச்சயமாக ஒரு அற்புதமான ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வீர்கள். ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை நம்மால் வாழ முடியும். வெறுமனே படிப்பதனால் நமக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொள்வோம், கிறிஸ்துவில் என்ன சிந்தை இருக்கின்றது என்பதை கவனிப்போம், கிறிஸ்துவின் தனித்தன்மைகளை அல்லது தெய்வீக சுபாவங்களை அதாவது கிறிஸ்துவில் உள்ள வுhந னுiஎiநெ யேவரசந என்பதை நாம் மிகச்சரியாக புரிந்துக்கொள்ளவும், அதைக்குறித்து சிந்திப்பதற்கும் ஒரு நாள் அல்ல நாம் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஜெகத்தில் வாழ்ந்து உலகத்தில் ஜீவிக்கும் வரை யுக யுகமாய் சிந்தித்து கொண்டே இருக்க வேண்டும்.
1.அன்புள்ளவராக இருந்தார்
முதலாவது இயேசுவின் தனித்தன்மை அவர் அன்புள்ளவராக இருந்தார். அன்புக்கு இலக்கணம் இயேசுதான். ஒரு வேத வசனத்தை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். யோவான்13:1 இப்படி பேசுகின்றது,
'தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.'
அவர் எப்படி அன்பு வைத்தாரோ முடிவு பரியந்தம் அதே அன்பை வெளிப்படுத்தினார், எப்படி அன்பை துவகத்தில் காண்பித்தாரோ அந்த அன்பிலே மாற்றம் இல்லை. தன்னைக் காட்டிக்கொடுக்க இருந்த யுதாஸ் காரியேத்தைப் பார்த்து துரோகியே என்று ஒருபோதும் கூப்பிடவில்லை. கொலைக்காரன் என்று குற்றம் சொல்லவில்லை. 'சினேகிதனே...!சினேகிதனே...!' என்றார் இயேசு, இது எப்படி முடிந்தது? அதுதான் கிறிஸ்து. ஆகவே அன்பிலே தனித்தன்மை வாய்ந்தவர். எந்தளவுக்கு அன்புள்ளவராக இருக்க வேண்டும் என்பதற்கு அவர் வாழந்து காட்டியுள்ளார். அன்பு ஒரு வார்த்தையில் அல்ல, செயல்பாட்டில் இருக்க வேண்டும். இயேசு தன்னுடைய செயலில் காண்பித்தார்.

யோவான் 4ஆம் அதிகாரத்தில் பல ஆண்களை திருமணம் செய்த அந்த சமாரிய பெண்ணை அவர் கண்டித்து பேசவில்லை. அவள் தன்னுடைய புருஷன் இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை. பல ஆண்களை திருமணம் செய்தவள் என்பதை அவள் மறைத்து சொல்கிறாள். பாவமான வாழ்க்கை வாழ்கின்ற அந்த பெண்ணைப் பார்த்து கோபப்பட்டு கடிந்து பேசவில்லை இயேசு, மாறாக அந்த பாவ ஆற்றிலிருந்து அந்த குழியிலிருந்து அவளை தூக்கி விடவே எத்தனிக்கிறார். அன்பை வெளிப்படுத்துகிறார். 'உண்மைதான் உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் இப்போது இருப்பவனும் உனது புருஷன் அல்ல, உண்மையை சொல்லுகிறாய் என்று சொல்ல வேண்டிய விதத்தில் அவர் சொன்னார். அந்த பெண்ணுடைய பாவத்தை அவர் வெளிப்படையாக சுட்டிக் கான்பித்து கடிந்து கொள்ளாமல் அந்த அன்பு உள்ளத்தோடு பேசினாh. ஆனால் எல்லாம் தெரிந்த வேத பண்டிதர்கள் பரிசேயர் வேதபாரகர்களை அவர் சாடினார். அறியாமல் பாவத்தில் விழுந்து கிடக்கின்ற மக்களை குறித்து மனம் உறுகினார். அன்பை வெளிப்படுத்தனாh. அந்த அன்பினால்தான் இன்றைக்கும் இலட்சக்கனக்கான கோடிக்கனக்கான மக்கள் இந்த அன்பு இரட்சகரை ஆராதனை செய்து வருகிறாhகள். இந்த சுவிஷேச ஊழியத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ நீங்கள் பணி செய்வதற்கு அர்ப்பணித்திருக்கலாம. அல்லது இனிமேலாவது இந்த சுவிசேஷ வேலையில் நான் தோள் கொடுப்பேன் என்ற உணர்வோடு இங்கே வந்திருக்கலாம். அப்படியான உங்களுக்கு என் இதயத்தின் ஆழத்தில் இருந்து என் நன்றியை தெரிவிக்கிறேன்.
உலகத்திலே ஒரு மேன்மையான பணி உண்டானால் அது சுவிசேஷ பணிதான். நம்முடைய சுவிசேஷ வேலையில் நூறு வீதம் வெற்றியை காண வேண்டும் என்று சொன்னால்ளூ அதற்கு நமக்கு அன்புள்ள இதயம் வேண்டும். அன்பு இல்லாமல் நீங்கள் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின சுவிசேஷசத்தை மனப்பாடமாக பாராயணம் பண்ணினாலும் ஒரு மனுசனும் ரட்சிக்கப்பட மாட்டான் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
இன்றைக்கு கிறிஸ்தவ சமுதாயம் அன்பை தொலைத்து விட்டது. வேதத்தை உயர உயர்த்தி சத்தத்தையும் கூடுதலாக்கி அவர்கள் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் யாருக்கும் எந்த பயனும் இருக்காது என்பது என்னுடைய கருத்து மாத்திரம் அல்ல தேவனுடைய கருத்தும் அதுதான். ஆகவே கிறிஸ்துவின் தனித்தன்மையை விளங்கி கொண்டு தெய்வீக அன்பை நாம் பின்பற்ற வேண்டும்.
அன்பில்லாதவன் தேவனை அறியான்இ தேவன் அன்பாகவே இருக்கிறார்.
ஐ யோவான் 4:8
ஆதனால்தான் இன்று நாம் இங்கே இருக்கின்றோம். தேவன் அன்பாகவே இருக்கிறார். அதனால்தான் நான் இங்கே இருக்கிறேன். நீங்களும் இங்கு இருக்கிர்கள்;.
நாம் பிரசங்க மேடையயை ஆங்கிலத்தில் 'புல்பிட்'(pரடிவை) என்போம். இந்த புல்பிட் என்பது மிக அருமையான பதம். இதனுடைய சரியான அர்த்தம் என்ன? பிட் என்றால் குழி(pவை) புல் என்றால் இழு அல்லது தூக்கிவிடு (pரட)அதிலிருந்து இழுத்தல். இந்த பீடம் இருக்கின்றதே இதனுடைய சரியான அhத்தம் என்ன? புல்பிட் என்று அடிக்கடி பயண்படுத்துகிறார்களே நம்முடைய பிரசங்கிகள். இங்கு பிரசங்க மேடையில் (pரடிவை) இருக்கின்ற நான் மனிதனுடைய இதயங்களை புண்படுத்துவதற்காக அல்ல மேலே இருந்த படி கீழே இருக்கும் மக்களை தூக்கி எடுப்பதற்க்காகவே. ஆகவேதான் புல்பிட் என்ற பதம் பயண்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணர்வு நமக்கு எப்போதுமே வேண்டும். அவர் அன்பை வெளிப்படுத்துகின்ற அந்த பாங்கு,
' தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும்இ தன் சகோதரனைப் பகைத்தால்இ அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன்இ தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? ஐ யோவான் 4: 20
மனுசனிடத்தில் அன்பு செலுத்தாமல் நாம் தேவனிடத்தில் அன்பாக இருக்கிறோம் என்று சொன்னால் அது பொய் என்கிறார் ஆண்டவர். நாம் மனிதனிடத்தில் அன்பு காட்டுவதில்லை, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சண்டை போடுகிறோம். சரியான அன்பை வெளிப்படுத்துவதில்லை. ஆனால் ஆராதனைகளில் கையை உயர்த்தி 'ஜ லவ் ஜிஸஸ்' என்று சொல்கிறோம். மகிழ்வடைவதற்கு பதிலாக தேவன் துக்கப்படுகிறார்.
நம்மூலமாக ஒரு பெரிய இரட்சிப்பு, மீட்ப்பு இந்த சமுதாயத்தில் உண்டு பண்ண வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இப்போதே கிறிஸ்து பெருமானின் அன்பு என்கிற தனித்துவதை தனித்தன்மையை அல்லது சுபாவத்தை பெறுவதற்கு அர்ப்பணம் செய்யுங்கள்.
அனேக ஆண்டுகளுக்க முன்பாக ஒரு தாயார் என் வீட்டுக்கு வந்தார்கள். அந்த தாயரிடத்தில் கிறிஸ்த்துவின் அன்பை பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். கிறிஸ்த்து உங்கள் பாவங்களை மன்னிப்பார். உங்களின் அக்கிரமங்களுக்கு சிலுவையில் அடிக்கப்பட்டார். உங்களின் பாவங்களை மன்னிப்பதற்கு இயேசு இப்போது ஆயத்தமாக இருக்கிறார். உங்களின் வாழ்க்கையை அhப்பணம் செய்தால் இப்போது நீங்கள் அவரின் பிள்ளையாக மாறலாம் என்று எளிமையானதொரு சுவிசேஷத்தை அவர்களுக்கு சொல்லி கொண்டிருந்தேன். அவர்களுக்கு 55 வயது இருக்கும், அந்த தாயாரின் கண்களிலிருந்து கண்ணீர் வடிய தொடங்கியது. நான் தாயைப்பார்த்து கேட்டேன் 'ஏனம்மா அழுகிறீர்கள்....? காரணம் என்ன?' அந்த தாய் சொன்னார்கள் சில ஆண்டுகளுக்கு முன்பதாக எனது கணவர் மலேசியா சென்றார் அங்கு சீன மொழி பேசுகின்ற சீன பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு வந்தார். என்னுடைய பண்ணை வீட்டிலே அந்த சீன பெண்ணை குடியமர்த்தி விட்டு, என்னை தோட்டத்து வீட்டிலே குடியமர்த்தினார். இரண்டு பேரும் சேர்ந்து மது குடிப்பாhகள் அந்த சீன பெண்ணும் அந்த அருமையான ஐய்யாவும். அவர்களுக்கு இந்த ஆட்டிறச்சி கோழி இறச்சி வறுத்து கொடுப்பதற்கு என்னை அழைப்பார்கள். குடித்துவிட்டு கேவலமான வார்த்தைகளினால் நிந்திப்பாhகள், அடிப்பபார்கள், உதைப்பாhகள். ஒருநாள் மிகவும் ஆக்ரோசமாக என்னை கொலை செய்து விடுவதற்காக திட்;டம் தீட்டி தோட்டத்தில் உள்ள என் வீட்டுக்கு வந்தார். அங்கே நான் வருவதற்கு தாமதமானதால் அவர் அரிவாளை அவரின் தலைப்பகுதியில் வைத்துக்கொண்டு குடித்திருந்ததால் அவர் அப்படியே மயங்கி உறங்கிகொண்டிருந்தார்.
?நான் அந்த அறைக்க வந்தேன். என்னுடைய கணவரின் கைகளில் இருந்த அரிவாளை பார்த்தேன் பெரிய அரிவாள் அது. வெறி கொண்ட இவர் என்னை கொலை செய்வதறகு முன் நான் அதை செய்வதற்கு முந்திக்கொள்ளலாம் என்று நினைத்தேன். மயக்கத்தோடு உறங்கி கொண்டிருக்கின்ற என்னுடைய கணவரை அவர் அருகில் இருந்த அரிவாளாளை எடுத்து ஓங்கி நான் வெட்டினேன். வலியோடு கண் விழித்தார். மறுபடியும் இரண்டாம் முறை அரிவாளை எடுத்து அவரின் கழுத்திலே வெட்டினேன். அப்படியே அவர் சரிந்து விழுந்தார். என் கைகளில் இருந்த அந்த இரத்தம் வடியும் அரிவாளை எடுத்துக்கொண்டு நேராக பொலிஸ் நிலையத்தில் நான் சரணடைந்தேன். இதற்கு வேண்டிய தண்டனை சிறைச்சாலையில் முடிய, நான் விடுதலை அடைந்தேன். ஆனால் நான் சிறையில் இருந்து விடுதலைப் பெற்றாலும் என் மனசாட்சி என்னை விடுதலை செய்யவில்லை. என் கண்ணை மூடி என் கணவர் கடைசியாக சாகும் போது அவர் கடைசியாக கண்விழித்து பார்த்த அந்த கோரக்காட்சி வந்துகொண்டே இருக்கின்றது. சொந்த கணவரையே கொன்ற இந்த பாவியாக இருக்கின்ற என்னுடைய பாவத்தை இயேசு மன்னிப்பாரா....? என்னுடைய சமுதாயத்திலே, என்னுடைய ஊரிலே, ஜாதி ஜன மக்களெல்லாம் என்னை கொலைக்காரி என்று தூற்றுகிறார்கள், இந்த இயேசு என்னை அப்படி உதறித்தள்ளி விடுவாரா? என் தப்பிதத்தை மன்னிப்பாரா...? என் பாவம் மன்னிக்கப்படுமா? இந்த கொடிய பாவத்திற்கான பரிகாரம் உண்டா? எனறு புலமபினார்கள். நான் அவர்களுக்கு மிகவும் மிகவும் அமைதியாக சொன்னேன். 'அம்மா இந்த நிமிஷத்திலே இயேசுவுக்கு உங்களை ஒப்புக்கொடுத்தால் அம்மா உங்களுடைய எல்லா பாவங்களையும் இயேசு கழுவுவார்...' உன்னைப்போல் இந்த உலகத்தில் எல்லோரும் ஏதோ ஒரு வித்தில் தவறு செய்து கொண்டிருக்கிறார்கள். இயேசு அதை பழிகளாக பார்க்கவில்லை, ஐயோ என்னுடைய பிள்ளைகள் மாண்டு போகிறாhகள். மேய்யப்பன் இல்லாத ஆடுகளைப்போல் சுகவினப்படுகிறார்கள். மனுசங்கடத்;தோடு இருக்கிறார். ஆதலால் இயேசு நிச்சயமாக உங்கள் பாவத்தை மன்னிப்பார் என்று சொன்னேன். நீண்ட நேரம் அவரிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன்.அந்த அம்மா அமைதலோடு கண்ணீர் வடிக்கத் தொடங்கினார் இயேசுவின் மாறாத அன்பு அவர்களின் உள்ளத்தை நிறைப்பிட்டு. முடிவில் ஆண்டவர் நாமத்தினாலே அவருக்கு ஞானஸ்தானம் நானே கொடுக்க கர்த்தர் உதவி செய்தார். இன்றைக்கு அந்த தாயார் குழிப்பறி என்ற சபையிலே அங்கத்தனராக இருக்கிறார்கள்.
இந்த தாய் மீட்கப்பட்டதன் காரணம் என்ன? கிறிஸ்த்து அன்பு உள்ளவர் என்ற சத்தியம் அந்த மகளின் உள்ளத்தில் சென்றததினாலலே இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.
2. மன்னிக்கிறவர்
இரண்டாவதாக இயேசு மன்னிக்கிறவர். அவரின் மிகப்பெரிய தனித்தன்மை மன்னிப்பு.
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்துஇ கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோலஇ நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். எபேசியர் 4: 32
தேவன் உங்களை மன்னித்ததை போல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள், மன்னிப்பதில் வல்லவரே என்ற ஒரு பாடல் நினைவுக்கு வருகின்றது. மன்னிப்பதில் வல்லவர் சிலுவையிலே தொங்கி கொண்டிருக்கிறார். உலகத்திலேயே மிக கொடூரமான தண்டனை எது தெரியுமா? சிலுவை தண்டணைதான். சிலுவை தண்டணை என்கிற இந்த தண்டணையை, கொலைக் கருவியை கண்டு பிடித்தவர்கள் பாரசீகர்கள்தான். அந்த கொலைக்கருவியை கண்டுப்பிடித்த பிறகு அதை ரோமர்கள் பின்பற்றினார்கள். ஏன் அந்த கொலைக்கருவியை கண்டுப்பிடித்தாhகள் தெரியுமா? அவர்கள் பூமியை தெய்வமாக வழிபடுபவர்கள். அதனை குற்றமாக கண்டுப்பிடிக்கின்ற மனிதனுடைய உயிர் தம்முடைய தெய்வத்திடம் போக கூடாது என்பதற்காக அந்தரத்திலே அவன் சாக வேண்டும் என்ற காரணத்திற்காகவே கொலைக்கருவியான சிலுவையை கண்டு பிடித்தாhகள். மிகவும் கொடுரமான தண்டணை. என்றைக்கு இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்டாரோ அதற்கு பிறகு முற்றிலுமாக அந்த தண்டணை நிறுத்தப்பட்டது. ஸ்பார்ட்டகஸ் என்கிற அருமையான ஓர் பெயர். ஒருவேலை நீங்கள் புத்தகம் படிப்பவர்களாக இருந்தால் ஸ்பாhட்டகஸ் என்ற புத்தகத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள். நம்முடைய உலச்சரித்திரத்திலே மிகப் பெரிய சாம்ராஜ்யம். ஏறத்தாழ 1500 ஆண்டுகள் முழு உலகத்தையும் தம் கட்டுப்பாட்க்குள்ளே வைத்திருந்த சாமராஜ்யம் ரோமர் சாமராஜ்யம். 1200 ஆண்டுகள் இந்த பூமியை ஆண்டார்கள். நிறைய சாம்ராஜ்யங்கள் வந்தன வீழ்ந்தன, இருந்தன. எபரேயர் சாம்ராஜ்யம், எகிப்தியர் சாம்ராஜ்யம், மேதியா, பெர்சியர் சாம்ராஜ்யம், பாபிலோனிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம் என்று வரலாற்றை புரட்டியவர்களுக்கு தெரியும். இந்த ரோம சாம்ராஜ்யத்திலே ஸ்பார்ட்டகஸ் என்று சொல்கின்ற ஒரு அடிமை. 'போரர்' என்று சொல்லுவார்கள் அவர்களை. அதாவது மூன்று தலைமுறைகளாக அடிமை வேலை செய்கிறவர்களுக்கு போரா என்று பெயர். அவர்களுக்க சிந்தனா சக்தி குறைவு. மிருகத்தை போல நடத்தப்பட்டார்கள். ஒரு வேலை படிக்க விருப்பமுள்ளவர்கள் அந்த பெயரை குறித்துக்கொண்டு புத்தகங்களை தேடுங்கள். மிக அருமையான பத்தகம். ஆங்கிலத்தில் ஸ்பாhட்டகஸ் பற்றி அருமையான திரைப்படம் வந்திருக்கின்றது. மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்படிப்பட்ட சிந்திக்கவே முடியாத அந்த ஸ்பாட்டகஸூடைய உள்ளத்திலே ஒரு புரட்சி தீ வருகின்றது. அவனை பின் தொடாந்து ஆயிரக்கணக்கான அடிமைகள் புரட்சி செய்ய ஆரம்பித்தார்கள். மிகப் பழமை வாய்ந்த ரோம சாம்ராஜ்யம் சரிவதற்கு அதுதான் காரணம் ஒரே நாளில் எறத்தாழ ஏழாயிரம் பேர் வரையிலான அடிமைகளை ஒன்றாக பிடித்து சிலுவையில் அந்தரத்திலே கொன்றாhகள் அந்த ரோமாகள். சிலுவைத் தண்டணை எவ்வாறு கொடுமையானது என்பதை விளங்கி கொள்வதற்கு அந்த புத்தகம் உங்களுக்கு உதவி செய்யும். முழு தேகமும் ஆணியிலே அடிக்கப்பட்டு தொங்கவிடப்படுகின்ற போது இருக்கின்ற வேதனை இருக்கின்றதே பாருங்கள். அது மிகப் பெரிய தண்டனை. ஜோசப் வாஸ் என்கிற எபிரேய வரலாற்று ஆசிரியர் இதனை விபரிக்கிறாh. அந்த கொடிய வேதனையில் எந்நவொரு மனசனும் சபிப்பான். தம்மை கைது செய்தவனை சபிப்பான், தன்னை பிடித்தவர்களை சபிப்பான், ஆணி அடித்தவனை சபிப்பான், சிலுவை செய்தவனை சபிப்பான் ஆனால் இயேசுவோ அதை செய்யவில்லை என்ன செய்தார்? 'பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாது இருக்கிறாhகள் தயவு செய்து மன்னியும் பிதாவே...!' எப்படி முடிந்தது? அதுதான் இயேசு கிறிஸ்து. அதுதான் அவருடைய தனித்தன்மை மன்னித்தார்.
அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். மத்தேயு 27:44
அவரோடு சிலுவையில் அறையப்பட்டு கதறும் அவர்களும் அப்படியே நிந்தித்தார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளரும் மற்றவருடன் சேர்ந்து இயேசுவை நிந்தித்தார்கள். அதற்கு பிறகுதான்
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும்இ தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். லூக்கா 23:44
இயேசு இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறார். அந்த ஜெபத்திற்கு பிறகு நிந்தித்த இரண்டு கள்ளர்களில் ஒருவனுக்குள் ஒரு பெரிய மாற்றம். இயேவுக்கு இடது புறம் இருந்த திருடன் சொல்கினறான் 'நீ தெய்வமானால் உன்னையும் எங்களையும் ரடச்சித்துக்கொள்' என்று சொல்கிறான். வலது புறத்தில் இருக்கின்ற திருடன் சொல்கின்றான் 'நாம் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கின்றோம் தகாதவைகளுக்கு தண்டனை அனுபவிக்கவில்லை...'என்று கூறி மனம் திரும்பகிறான். கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவரை நிந்தித்தவன் எல்லோரிடமும் சேர்ந்து இன்னும் நிந்தித்துக்கொண்டிருந்தான். ஆனால் மன்னிக்கும்படி இயேசு செய்த ஒரு சின்ன ஜெபம் ஒரு திருடனை மாற்றியது.
மோசேயினுடைய பிரமாணத்தை கடந்து புதிய பிரமாணத்தையும் கடந்து இயேசுவினுடைய மன்னிப்பினாலே அவர் கனப்பொழுதில் பரிசுத்தம் செய்து விட்டார். மன்னிக்கிற இந்த தன்மை இருக்கின்றது பாருங்கள் அது மனிதர்களை தன் பட்சத்தில் இழுத்துக்கொண்டு வரும். மொழிகளை கடந்து, கல்வி அடிப்படைகளை, ஜாதி அடிப்படைகளை மற்றும் எல்லா அடிப்படைகளையும் கடந்து மன்னிக்கின்ற இதயம் இருந்தால் மக்களை கர்த்தர் இழுத்துக்கொண்டு வர முடியும். எனக்கொரு மன்னிக்கிற இதயம் வேண்டும். இது இல்லாதவன் சுவிசேஷ வேலையை செய்து பயண்னில்லை. மன்னிக்கிற ஒரு தன்மை இல்லாமல் தேவனுடைய வார்த்தையை பேச இயலாது.
ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் தவறு செய்து கையும் கழவுமாக பிடிப்பட்டார். நாளை காலை முகாமையாளர் அறைக்கு செல்ல வேண்டும். ஆங்கே அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்று சொன்னால் அவருடைய வேலை அங்கே பறிக்கப்படும் எல்லோருக்கும் அது தெரியும் அவன் வேலை பறிக்கப்படும் என்பது. அடுத்த நாள் காலை முகாமையாளர் முன்பு கைகளை கட்டி நின்ற அந்த மனிதன் அவனிடம் 'இந்த தவறை செய்தாயா...? ' என்று கேட்டார் முகாமையாளர். ஆதற்கு அந்த மனிதர் 'ஆம் நான் செய்தேன்...' என்றார். 'இதற்கு என்ன தண்டனை என்று தெரியுமா..?' என்று கேட்டார் முகாமையாளர். 'எனக்கு இந்த கம்பெனியில் வேலை இருக்காது என்று எனக்கு தெரியும்....'
'இந்த தவறு மன்னிக்க கூடியதா...?' என்ற கேட்டார் முகாமையாளர் 'மன்னிக்கப்படாத குற்றம் நான் செய்தது...' என்றார் அந்த மனிதர். முகாமையாளர் அவரைப்பார்த்து சொன்னார் 'நான் உன்னை மன்னிக்கிறேன்...! இந்த நிறுவனத்தில் இவ்விதமாக மன்னிப்பட்ட இரண்டாவது நபர் நீதான்...முதலாவது நபர் யார் தெரியுமா...? நான்தான்... நான் மன்னிப்பட்டேன் ஆகவே மன்னிப்பின் விலை எனக்கு தெரியும்...மன்னிப்பின் மதிப்பு எனக்கு தெரியும்... நான் உன்னை மன்னிக்றேன்...' அந்த மனிதரின் கண்களிலிருந்து கண்ணீh வந்தது.
'சார் இனி உலகத்தில் இருக்கின்ற வரைக்கும் உண்மையாகவே இருப்பேன்...'
இயேசு அதைதான் சொல்கிறார். மன்னிப்பை வெளிப்படுத்துவது மாத்திரம் அல்ல அவருடைய அடியார்களாகிய நாமும் கூட மன்னிக்கின்ற சிந்தையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார்.
நான் உனக்கு இரங்கினதுபோலஇ நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லிஇ
அவனுடைய ஆண்டவன் கோபமடைந்துஇ அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
நீங்களும் அவனவன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால்இ என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார். மத்தேயு 18:33,34,35
மத்தேயு 18 ஆம் அதிகாரத்தில் இறுதி பகுதியை தியானத்துடன் வாசித்து பாருங்கள். அதன் இறுதி பகுதியை பாருங்கள் நீங்கள் மற்றவர்களுக்கு மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் தேவன் உங்களுக்கு மன்னிக்க மாட்டார். என்று எழுதியுள்ளது. கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

3. சாந்தம் அல்லது மன தாழ்மை உள்ள ஆவி
சாந்தமும் மனத்தாழ்மையும் இயேசுக்குள் இருக்கின்ற மிகப் பெரிய சுபாவம் என்று சொல்லலாம்.
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டுஇ என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுதுஇ உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார். மத்தேயு 11 :29
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கின்றேன் இந்த வார்த்தைகள் உற்சாகப்படுத்துகின்றது. என்னிடத்தில் வந்து கற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது உங்கள் ஆத்மாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஒரு காரணத்தை சொல்ல விரும்புகிறேன். புழைய ஏற்பாட்டில் ஒரு பெண்மணி எப்படி இருக்க வேண்டும் என்று ஞானி சொல்கிறார். நீதி மொழிகள் 31ஆம் அதிகாரம் அதை சொல்கின்றது. அதிலே முதல் ஒரு கேள்வி கேட்டுவிட்டு ஒரு இல்லத்தரசியின் அதாவது நல்ல பெண்மணியின் விளக்கத்தை அதில் கொடுக்கிறார்.
'குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.'
என்ன கேள்வி அது ? குணசாலியான ஸ்திரியை கண்டுப்பிப்பவன் யார்? குறையே இல்லாத மனைவியை கண்டுப்பிடித்தவன் யார்? சதோதராகளே யாரிடமாவது தைரியம் இருக்கின்றதா ஒரு குறையும் என் மனைவியிடம் இல்லை என்ற சொல்வதற்கு. அப்படி யாராவது கூற முடியுமா? என் மனைவியை குறையே சொல்ல முடியாது ஏனென்றால் யாரும் அப்படி கண்டுப்பிடிக்கவில்லை. அப்படி கண்டுப்பிடித்து விட்டால் அந்த பெண்மணியின் விலை முத்துக்களை பார்க்கிலும் உயர்வு. அங்கே அந்த பெண்ணுடைய சுபாவம் இருக்கினறதே அதை பற்றி சொல்லப்படவில்லை. ஆனால் சில விளக்கங்களை சொல்கிறார். திருமறைதான் எத்தனை அழகானது. புதிய ஏற்பாட.டிலே அதற்கு விளக்கம் சொல்லப்படுகின்றது. புதிய ஏற்பாட்டிலே பரிசுத்த ஆவியானவர் அதற்கு பதிலை வைக்கிறார். பேதுரு மூலமாக இதற்கான பதில் கிடைக்கின்றது.
மயிரைப் பின்னிஇ பொன்னாபரணங்களை அணிந்துஇ உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல்இ அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 1 பேதுரு 3,4
இந்த விலையேறப்பெற்ற பெண், பெண்ணுக்கரிய சுபாவம் இங்கே சொல்லப்பட்டுள்ளது. சாந்தமும் மன அமைதியுள்ள ஆவி ஒரு பெண் மணிக்குள்ளே அந்த சுபாவம் வந்துவிட்டால் நிச்சயமாகவே அவர்கள் விலையேறப்பெற்ற பெற்றவர்கள். முத்துக்களை பார்க்கிலும் விலையேறப்பெற்றவர்கள். இப்பொழுது என்ன சொல்ல வருகிறேன் என்றால் வெறுமனே இந்த வேதப்பகுதி பெண்களுக்கு மாத்திரம் அல்ல மணவாளனாக இயேசுவுக்கு இந்த சுபாவம் வந்து விட வேண்டும். கிறிஸ்து மணவாளனாக வெளிப்பட போகிறார் என்று நீ விசுவாசித்தால் மணவாட்டியான இந்த சபையிலே சாந்தமும் மன அமைதியும் உள்ள ஆவி எமக்கு தேவை. ஆவரை போல சாந்த குணமுள்ள வேறோரு மனிதனையும் நாம் பார்க்கவில்லை.
சாந்தம் என்றால் என்ன என்பதை நமக்கு வெளிப்படுத்தி அதை பின்பற்று என்ற நமக்கு சொல்கிறார். பாருங்கள் எபிரேயர் புத்தகம் 12 ஆம் அதிகாரம் முதல் வசனம்,
ஆகையால்இ மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கஇ பாரமான யாவற்றையும்இ நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டுஇ விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கிஇ நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;
இயேசுவை நோக்கி ஓடுங்கள். கிறிஸ்த்துவை நோக்கி ஓடுங்கள், அவர்தான் நமக்கு முனமாதிரி. இன்னும் கூடுதலாக பவுல் சொல்லகிறார் ஊழியக்காரர்கள் சிலர் சொல்லுவாங்க. நாங்கள் எல்லாம் மனிதர்கள் தயவு செய்து எங்களை பின்பற்றாதீhகள். இயேவை பாருங்கள் என்று ஆனால் பவுல் அப்படி சொல்லவில்லை.
நீங்கள் கிறிஸ்துவை பின்பற்றுவது போல் நீங்கள் எங்களை பின்பற்றுங்கள் அதாவது வாழந்து அவர் வாழந்து காட்டினார். நம்முடைய முன்மாதிரி இயேசுதான். சாந்தம் என்றால் என்ன என்பதை அவர் வெளிப்படுத்தினார். தன்னைத்தானே தாழத்தினார் என்கிறது பிலிப்பியர் 2:8 ஆம் சத்திய வசனம்.
'அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டுஇ மரணபரியந்தம்இ அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகிஇ தம்மைத்தாமே தாழ்த்தினார்.'
தன்னைத் தாழத்தும் சுபாவம் அதாவது வுhந ர்ரஅடிடந ளுpசைவை அல்லது pழழச ளிசைவை எளிமையுள்ள ஆவியின் தன்மை இருக்க வேண்டும் நமக்கும். இயேவுக்குள் அந்த சுபாவம் இருந்தது.
இயேசுவுக்காக நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பினால் தயவு செய்து சுபாவங்களை முதலாவது தரித்துக்கொள்ள முயற்ச்சி செய்வோம். ஒரு சின்ன ஹைகு கவிதை இப்படியாக சொல்கின்றது.
தீ குச்சி ஏன்
எரிகிறது...?
அதன் தலை கனமாக இருப்பதனால்...!
தீக்குச்சி ஏன் எரிகிறது அதன் தலை கனமாக இருப்பதனால்தான். நிறைய பேர் அழிந்து போவதன் காரணம் தலைக்கணம். ஆக நாம் அகந்தைக்கு பதிலாக மனவேற்றுமைக்க பதிலாக நாம் அன்பு செலுத்த கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாகவே கிறிஸ்த்துவினுடைய அந்த சுபாவத்தை பெற்றிப்போம். ஆகவே நாம் தாழ்ந்த சிந்தனை உள்ளவராக இருப்போம். தாழ்ந்த சிந்தனையை தரித்துக்கொள்வோம்.
ஒரு மனிதனை குறித்து அதாவது பூமியிலே இந்த மனுஷன்தான் எல்லாருக்குள்ளும் சாந்தமாக இருந்ததாக கர்த்தர் சாட்சி கொடுத்தார். யார் என்று தெரியுமா? மோசேயை குறித்துதான் கர்த்தர் சொன்னார். மோசே எப்படிப்பட்டவன்? அடுத்தவன் பிரச்சினையில் தலையிட்டு இன்னொருவனுக்காக கொலை செய்து கோபத்தில் மண்ணில் புதைத்தவர். ஒரு கொலைக்காரனைப் பார்த்து கர்த்தர் சாட்சி கொடுக்கிறார். பூமியில் முன்னாள் கொலைக்காரன் இவர்தான் மிக சாந்தமாக இருப்பதாக ஆண்டவர் சொல்கிறார். நாம் அனைவருமே குறைவுள்ளவர்கள்தான். கர்த்தர் தனக்கு இணையாக நம்மை தூக்கி விடவே முயற்ச்சி செய்கிறார். அவன் கொலைக்காரனாக இருந்தவன் ஆனால் 40 ஆண்டுகளுக்கு பிறகு அவனுடைய மனதை கர்த்தர் மாற்றிக் கொண்டே வருகிறார். ஒரு கொலைக்காரன், கோபக்காரன் சாந்த சொரூபியாக மாறுகின்றான்.
வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டை விட புதிய ஏற்பாடு மிக கிருபையுள்ள பிரமாணத்தை நமக்கு தருகின்றது. நாம் இன்னும் வேகமாக தேவன் எதிர்பார்க்கின்ற அந்த தெய்வீக சுபாவத்தை தரித்துக்கொள்வதற்கு கிருபை நமக்கு கிடைத்துள்ளது. கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.


4.கீழ்படிதல்
நான்காவதாக கீழ்படிதல். நீங்கள் பிலிப்பியர் 2:8 வசனத்தை வாசித்துப் பாருங்கள்,
அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டுஇ மரணபரியந்தம்இ அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகிஇ தம்மைத்தாமே தாழ்த்தினார்.
சாகின்ற வரையும் கீழ்படிதல் இருந்தது. தன்னுடைய பெற்றோருக்கு அவர் கீழ்ப்படிந்து அடங்கி இருந்தார். என்று லூக்கா இரண்டாம் அதிகாரத்திலே வாசிகின்றோம்.
பின்புஇ அவர் அவர்களுடனே கூடப்போய்இ நாசரேத்தூரில் சேர்ந்துஇ அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.
கீழபடிதல் அவர் கூடவே இருந்தது. கீழ்படிதல் என்ற தனித்தனமை வாய்ந்தவர் இயேசு கிறிஸ்து. தனக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அவர் எதையும் செய்யவில்லை. அவர் அடிக்கப்படுகின்ற ஆட்டைப் போலவே அவர் சென்றார். வாளை உருவி ஒரு போர் சேவகருடைய காதை வெட்டுகிறான் ஒருவன் அவன்தான் பேதுரு. பேதுரு மீன் பிடிக்கினறவன். மீனை வெட்டும் போது முதலில் செதிலைதான் வெட்டுவாhகள். ஆனால் பேதுருக்கு அந்த போர் சேவகன் ஒரு பெரிய மீன் போல் தெரிந்திருக்கும் போல் போடு ஒரே போடாக என்று. ஆனால் இயேசு சொன்னார் 'பட்டயத்தை எடுத்தால் பட்;யத்தால் சாவான்... வாளை உறையிலே போடு' என்று கூறி அதற்கு பின் சொன்ன விசயம்தான் முக்கிதுவமானது.
'நான் பிதாவினிடத்தில் வேணடிக்கொண்டால் எத்தனை லேகியருக்கும் அதிகமான தூதுவர்கள் வருவாhகள். 12 க்கும் அதிகமான தூதர்களை பிதா அனுப்ப மாட்டாரா...? என்று தெரியாதா? நான் அதை செய்ய மாட்டேன். நூன் சிலுவை வரை கீழ்படிந்து இருக்க வேண்டும். என் மரணம் வரை கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். நான் அதை செய்ய போவதில்லை.'
இந்த பூமியில் நாம் எதிர்த்து நிற்கின்ற சத்துருவின் வல்லமையை மேற்கொள்வதற்கு எந்நளவுக்கு நாம் கழ்படிபவர்களாக இருக்கின்றோமோ அந்தளவுக்குதான் சாத்தானை ஜெயிக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் இயங்கிகொண்டிருக்கின்ற அந்தகார வல்லமைகளை மேற்கொள்ள வேண்டுமானால் என்னை ரட்சித்த ஆண்டவருக்கு நான் கீழ்படிய வேண்டும். தேவனுக்கு கீழ்படியுங்கள் பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். ஆனால் நாம் இப்படி மாற்றிக்கொள்கிறோம் முதலில் பிசாசுக்கு எதிர்த்து நிற்கிறோம், அப்புரமாக தேவனுக்கு கீழ்படிவதை பற்றி யோசிக்கிறோம். பைபிள் என்ன சொல்கிறது என்றால் முதலாவது தேவனுக்கு நீ கீழ்படிந்து பின்னாடி பிசாசுக்கு எதிர்த்து நில். அற்புதமான வாக்கு,
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ரோமர்16:20
சுமாதானத்தின் தேவன் சீக்கிரமாக சாத்தானை நசுக்கி உங்கள் காலுக்கு கீழ் போடுவார். யாருக்கு அதை செய்வார் ஆண்டவர் வந்தவர் போனவருக்கெல்லாம் அதை செய்வதில்லை. அதற்கு முந்திய வசனத்தை பாருங்கள்.
உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன்.
ரோமர் 16:19
உங்கள் கீழ்படிதல் யாவருக்கும் தெரிய வந்திருக்கின்றதே.... ரோமர் சபையை பார்த்து சொன்னார், நீங்கள் கீழ்படிதல் உள்ளவராக இருக்கின்றதனாலே சாத்தானை அவர் உங்கள் காலுக்கு கீழாக போடுவாh. அனேகருடைய வாழக்கையை சாத்தான் மேற்கொள்வதற்கான காரணம் என்ன? கிறிஸ்த்துவின் தனித்தன்மையான கீழ்படிதல் நம்முடைய வாழ்க்கையில் அனுபவமாக மறந்து போய் விடடோம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

5.அபிஷேகம்
அவர் ஒரு நிறைவான அபிஷேகம் உள்ளவராக இருந்தார். பழைய ஏற்பாட்டில், இரட்சகர்கள், நியாயபதிகள்,தீர்க்கதரிசிகள், இராஜாக்கள், ஞான திருஷ்டிக்காரர்கள், ஆசாரியர்கள், லேவியர்கள் இப்படி தேர்வு செய்தவர்களிடமே ஆவியானவர் இருந்தார். ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்தில் 'மாமிசமான யாவர் மேலம் ஆவியானவர் இறங்கி வந்தார்' அதற்கு காரணம் என்ன? இயேசு கிறிஸ்துவை குறித்து பைபிள் சொல்கிறது. யோவான் சுவிஷேம் 3:34 வசனம்,
'தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்இ தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.'
தேவன் அவருக்கு தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருந்தார். ருnஅநயளரசநயடிடந ளுpசைவை அளவிட முடியாத பரிசுத்த நிறைவு, இயேசு சொன்னார் 'நான் போவதை குறித்து கலங்க வேண்டாம்.. நான் போவது நல்லது, நான் போகாது இருந்தால் தேற்றரவாளன் வாரன் உங்களிடத்தில் வாரன் நான் போகாது இருந்தால் தேற்றரவாளன் உங்களிடத்தில் வரமாட்டார்' இயேசு போனார். இந்த பூமியிலே இயேசு இருந்த போது எப்படி அளவில்லாத தெய்விக ஆவியில' நிரப்பபட்டிருந்தாரோ அதே பிரசன்னத்தோடு பரிசுத்த ஆவியானவர் இந்த முழு உலகத்தையும் திருப்த்தி படுத்த இறங்கி வந்தார்.
ஒரு மனிதன் சாதாரணமாக இயேசுவை நோக்கி கூப்பிடுகிறார் பரிசுத்த ஆவியானவர் இறங்கி வருகிறார். ஆவியானவர் பெலப்படுத்துகிறார், நிறைய பேர் சொல்றாங்க பரிசுத்தமாக இருந்தால் ஆவியானவர் இறங்கி வருவார் என்று. உண்மைதான் தேவன் பரிசுத்தத்தை விரும்புகிறவர்தான். ஆனால் வேதம் சொல்கிறது மாம்சமான யாவர் மேலும் நம்மை சரி செய்வதற்காக ஆவியானவர் இறங்கி வருகிறார். நம்மை சரிப்படுத்துவதன் வேலை பூமியானது ஒழுங்கின்று வெறுமையுமாய் இருந்தது. ஜலத்தின் மீது ஆவியானவர் அசைவாடிக்கொண்டிருந்தார். ஓளித்தன்மையாக இருக்க கூடிய இந்த உலகத்தின் மீது ஆவியானவர் அசைவாடுகின்ற போது அந்த மனதனை கர்த்தர் சரிப்படுத்துகிறார்.
ழூன்றரை வருடம் செய்யத ஊழியம் இன்று முழு உலகத்தையும் பற்றிப்பிடித்திருக்கின்றதன் காரணம் இயேசு கிறிஸ்துவின் மீது இருந்த அளவில்லாத அபிஷேகம். தேவனுடைய அபிஷேகம் அவருடைய தனித்தன்மையை நமக்கு காண்பிக்கிறது. கனுக்கால் அளவல்ல, முழங்கால் அளவல்ல, இடுப்பளவல்ல நிச்சயமாக அவ்விதமான தனித்தன்மை உடையவராக இயேசு இருந்தார். இன்றைக்கு தமமுடைய பிள்ளைகளுக்கு அந்த பிரசன்னத்தை தருகிறாh. நீங்கள் விரும்பினால், தாகத்தோடு வாஞ்சித்தால், இயேசு அந்த பிரசன்னத்தை நமக்கு தருவார்.
நான் என் 17 வயதில் கிராமங்களுக்கு ஊழியம் செய்வதற்காக போகும் போது பெரியவர்களிடையே ஆண்டவரின் வாக்கை சொல்வதற்கு எனக்கு கஷ்டம். தாழ்வு மனப்பான்மை இருந்தது. ஆகவே நான் 17 வயது இறுதியிலே ஆணடவரின் பணியை செய்ய தொடங்கினேன். கிராமங்களுக்கு சென்று பாடல்கள் பாடி சிறுபிள்ளைகளுக்கு கதைகளை சொல்லி கொடுப்பேன். ஒரு கிராமத்திலே சிறு பிள்ளைகளுக்கு வகுப்பு எடுத்து முடித்துவிட்டு அவர்களுக்கு ஜெபிப்பதற்கு கற்றுக்கொடுத்து கொண்டிருந்தேன். அங்கே சுற்றிலும் சில பெரியவர்கள் சிறு பிள்ளைகள் கை கூப்பி ஜெபிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாhகள். அங்கே தீடிரென்று ஒரு பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவி அலற ஆரம்பித்தது. அவர் வேடிக்கை பார்க்க வந்த தாய், உடனே இந்த பிள்ளைகளுக்கு சொல்லி கொடுத்துக்கொண்டிருந்த ஜெபத்தை நிறுத்தி விட்டு அந்த அம்மாவுக்காக ஜெபித்தோம் இயேசு சுகத்தை கோடுத்தார். ஜெபித்து முடித்தவுடன் இன்னொரு பிசாசு அலற ஆரம்பித்தது. ஒரே நாளில் மூன்று பேருக்கு அந்த பிசாசினுடைய போராட்டம். வெகு நேரமாகி விட்டது கடைசியாக ஒரு பெண்னை விட்டு போக மறுத்தது. அது வரைக்கம் என்னை தம்பி தம்பி என்று சொன்னவர்கள் எல்லோரும் சாமி'னு சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு ஒரு பெரிய பதவி உயர்வு கிடைத்து விட்டது. இரண்டு பிசாசை விரட்டியவுடன். மூன்றாவதாக இரந்த பிசாசை விரட்டி இன்னும் கொஞ்சம் பதவி உயர்வை வாங்கலாம் என்றால் முடியலை. நானும் ஜிவனைக் கொடுத்து கத்திப்பார்த்து விட்டேன். ஆந்த பொண்ணு வாயை திறக்கவே இல்லை. கண்களில் இருந்து கண்ணீh வடிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இதற்கு ஒரு முடிவு செய்ய வேண்டும். தற்காலிகமாக நான் தப்பிக்க வேண்டும். நான் சொன்னேன் 'நாளைக்கு நான் விரதத்தோடு வர்றேன் இந்த அம்மாவும் விரதத்தோடு இருக்க வேண்டும்... பச்ச தண்ணீர் கூட குடிக்க கூடாது...' சொல்லிவிட்டு போய் விடடேன் இரவு முழுவதும் தூக்கமே இல்லை. நான் இப்படி ஜெபம் பண்ணினேன். 'அந்த ஒரு பிசாசை மட்டும் விரட்டிருங்க அப்பா... தயவு செய்து விரட்டிருங்க...' நாம அங்கே போய் பிசாசிடம் இப்படி கெஞ்ச முடியாது எங்கள் ஊரில் இப்படி ஒருவர் பிசாசை விரட்டியிருக்கிறார் 'பொல்லாத பிசாசே போறையா இல்லையா...அந்த பிசாசு போக முடியாது...நீ என்ன செய்வ...? வேறு என்ன செய்வது... சான் போறேனு போயிட்டார்...'
நானும் இரவு முழுவதும் ஜெபிக்கின்றேன் ஆண்டவரே தயவு செய்து இரண்டு பிசாசை விரட்டினீங்க ர்நடி ஆந டுழசன... தூங்கல காலையில் கொஞ்சம் அரை குறை தூக்கம் காலையிலேயே அந்த இடத்திற்கு போனேன். எனக்கு பயங்கர வரவேற்பு. இதோ சாமி வந்திட்டாருனு சொன்னாங்க...ஒரே உட்சாகம்தான் நான் இங்கே நான் அங்கே யோய் பிசாசு பிடிச்ச அந்த அம்மா தலையில கை வைத்து மறுபடியும் ஜெபிக்க ஆரமடபித்தேன் அஞ்சவே இல்லை. ஒரு மாற்றமும் இல்லை ரொம்பவும் சோர்வாகி விட்டது. அந்த சமயத்தில் ஒரு பெரிய பிரச்சினை அந்த ஊரில் தீடீரென்று ஒரு அம்மா மீது அருள் வந்து இறங்குமாம். ஆவங்க திருநீரை யார் மீது எடுத்து போட்டாலும் உடனே பிசாசு போயிருமாம். ஆதை அவர்கள் அருள் என்கிறார்கள் நாம் இருள் என்கிறோம். ஆக அந்த அம்மாவுக்கு நான் விரட்டும் போது பிசாசு வந்திருச்சி அது ஆட ஆரம்பித்தது. அது வரைக்கும் என்னை சாமி சாமி என்று சொன்னவர்கள் இப்போது தம்பி நீங்க விலகிக்கிங்க என்றார்கள். சட்டென்று எனக்கொரு பதவி பறிப்பு. ரொமபவும் சோர்ந்திருச்சி உள்ளம். அந்தம்மா ஒரு கையில் வேப்பிலை ஒரு கையில் திருநீர் தட்டு நாக்கை மடிச்சி வைச்சிகிட்டு இங்கிருந்து விலகு என்றது.
ஆக கடைசியில் பாருங்கள் எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை பக்கென்று என்னை விலக்க சொல்லிட்டாங்க அந்த பிசாசு என்னை விலகிக்க சொல்லிருச்சி. இங்கே நான் இருக்கிறேன் பிசாசு பிடிச்ச அந்த அம்மா முழங்கால் போட்டு உட்கார்ந்திருந்தாங்க. அவங்க சொன்ன பிறகும் நான் சுயம்பு லிங்கம் மாதிரி மாறவே இல்லை அசையேவே இல்லை. அந்த சமயத்தில்தான் என் உள்ளம் கதறுகிறது. பரிசுத்த ஆவியானவரே நீh வாரும் தயவு செய்து வாரும். நான் தோற்றுப் போகலை நீங்க தோற்றுப் போறீங்க அவ்வளவுதான். ஒரு யானை பலம் வந்தது மாதிரி இருந்தது எனக்கு. அந்த அம்மாவை பார்த்து சொன்னேன் ' வராதே கிட்டத்திலே' அப்படியென்று சொன்னேன். பக்கத்தில் நின்று பேச முடியாத நான் அவ்வளவு பேருக்கும் முன்னாடி அந்த அம்மாவைப் பார்த்து சொன்னேன். எல்லோரும் சாமி'னு கும்பிடுறாங்க அந்த அம்மாவை. ர்ழடல ளுpசைவை னுடைய செயல்பாடுகளை பாருங்கள் பக்கத்தில் வராதேனு சொன்னேன். அந்த அம்மா கேட்கலை முன்னாடி ஸ்டெப் எடுத்து வந்தாங்க என் பக்கத்தில் வந்தாச்சி. திருமநீறு எடுத்து அந்த அம்மா மீது போட போனார்கள். பரிசுத்த ஆவியானவர் என்னோடு இருக்கிறார் என்பதை நான் உணர ஆரம்பித்தேன்.
இயேசுவின் நாமத்தினால் கட்டளை இருகின்றேன் போ பிசாசே...! என்று அந்த அம்மாவை அதட்டினேன் இப்போது. முதல்ல பெரிய ஆளை தாக்கி போட்டுட்டு அந்த அம்மாவை ஒரே அடி அடிச்ச மாத்திரத்திலே அந்த அம்மா கீழே விழுந்துட்டாங்க. அன்றைக்கு விழுந்த அம்மா அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை. அதன் பிறகு இந்த பெண்ணுக்குள் இருந்த அசுத்த ஆவி அலறி ஓட ஆரம்பித்தது. கிட்;டத்தட்ட இந்த பெண்ணுக்குள் இருக்கின்ற கருவை நான் அழிசத்திருக்கின்றேன். குழந்தை பாக்கியம் இல்லாமல் பண்ணுறது நான்தான் என்று சொல்லி அந்த ஆவி பேச ஆரம்பித்தது. அதற்கு பிறகு மூன்று பிள்ளைகள் அந்த பெண்ணுக்கு பிறந்தன. கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. வுhந ர்ழடல ளுpசைவை தேவனுக்குள் அளவில்லாத ஆவியானவரை நாம் விரும்பம் போது விடுதலை ஊழியத்தில் கர்த்தர் நம்மை பயன்படுத்துவார். அசுத்த ஆவியின் பிடியில் கட்டப்பட்டிருக்கின்ற மக்களை மிக எளிதாக வெளியே கொண்டு வர முடியும். ஆகவே இயேசுவின் தனித்தன்மை அளவில்லாத அபிஷேகம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.


6. உலக மேன்மையை விரும்பாத சுபாவம்.
இயேசு உலக மேன்மையை விரும்பாத ஒரு சுபாவம் கொணடவர். அவர் நினைத்திருந்தால் அந்த தேசத்திற்கு ராஜாவாக மாறி இருந்திருக்கலாம். பலமுறை அவர் சொன்னார் நான் இந்த உலகத்துக்குரியவன் அல்ல என்று.
நான் உலகத்தானல்லாததுபோலஇ அவர்களும் உலகத்தாரல்ல.
யோவான் 17:16
என்னுடைய இராஜ்யம் இந்த உலகத்துக்குரியதல்ல என்றாh இயேசு.
அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறுஇ அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையேஇ அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். பிலிப்பியர் 3:17
இந்த உலகத்துகுரியவன் அல்ல நான் இந்த உலகத்தில் உள்ளவன் இந்த உலகத்தை குறித்தே சிந்திக்கிறார்கள். ஆப்படிதான் பிலிப்பியருக்கு எழுதுகிறார் பவுல்
'உலகத்தில் இருந்து வர கூடிய எந்தவொரு புகழையும் நான் விரும்பவில்லை.'
ஒரே ஒரு சம்பவத்தை மாத்திரம் இயேசுவின் வாழ்விலிருந்து எடுத்துக் காட்டுகின்றேன். ஒரு வேலை இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். ஒரு வேலை லூக்கா சுவிஷேசம் புத்தகத்தை நான் திரும்ப திரும்ப வாசித்த போது இந்த காரியத்தை ஆண்டவர் என்னிடம் வெளிப்படுத்தினாh. இயேசு ஒரு காரியத்தை சொல்கிறாh. அந்த வார்த்தை என்ன சொல்கிறது,
எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். லூக்கா 6:26
உங்களை எல்லோரும் புகழ்ச்சியாக பேசினால் ஐயோ ஐயையோ! அதன் பொருள் என்னவென்றால் ஆபத்து வருகின்றது என்று அர்;த்தம் யாரையாவது உங்களைப் புகழ்ந்து பேசினார்கள் என்றால். ;அண்ணே நீங்கள் நல்லவரு, வல்லவரு பெரியவருனு சொன்னாங்கனா? நம்;மை போட்டு புதைப்பதற்கு குழி தோன்றுகிறார்கள்' என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இயேசு இதை ஏன் சொன்னார்? ஆகவே அலருடைய உபதேங்களை கவனித்தால் முன்போ பின்போ அதற்குரிய அனுபவங்கள் அல்லது நிகழ்வுகள் இருக்கும். லூக்கா சுவிஷேச புத்தகம் 4ஆம் அதிகாரத்தை திருப்பி கொள்ளுங்கள் எல்லா மனுசங்களையும் புகழ்ந்து பேசாவிட்டால் உங்களுக்கு ஐயோன்னு சொன்னரே இவருக்கு வந்த அனுபவத்தை பாருங்கள். லூக்கா 4:15 சொல்கின்றது,
அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்துஇ எல்லாராலும் புகழப்பட்டார்.
20 வசனம் அதனுடைய இறுதி பகுதி
ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. லூக்கா 4:20
இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்நவர்கள்.
எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்துஇ அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.லூக்கா 4: 22
ஏல்லோரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்தார்கள். இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்நவர்கள்.
ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும் இவைகளைக் கேட்டபொழுதுஇ கோபமூண்டுஇ லூக்கா 4:28
இந்த எல்லோரும் யார்? அவரை புகழ்ந்தவர்கள்.
எழுந்திருந்துஇ அவரை ஊருக்குப் புறம்பே தள்ளிஇ தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். லூக்கா 4:29
அவரை தலைகீழாக தள்ளிவிடும்படிக்கு கொன்னு விடும் படிக்கு ஒன்று சேர்ந்தவர்கள் யார்? அவரை புகழ்ந்நவர்கள்தானே. ஆகவே இந்த அனுபவம் அவருக்க இருந்ததனால்தான் லூக்கா 6:26 அதிகாரத்தில் இப்படி சொல்கிறார்.
எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.
ஜாக்கிரதை ! ரொம்ப ஜாக்கிரதை !! எச்சரிப்பு , யாராவது உங்களை புகழ்தார்கள் என்றால் உங்களுக்கு ஐயோ. ஆகவே எந்த விதத்திலும் இயேசு இந்த உலகத்தின் புகழ்ச்சிக்காக, உலகத்தின் மேன்மைக்காக அடியணியவே இல்லை. யார் அவரை மயக்கவும் முடியாது.
அவர் மிக கவனமாகவே இருந்தார். நிறைய நேரங்களிலே நாம் உலகத்தின் புகழ்ச்சிகளை எதிர்பார்க்கின்றோம். எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் என்னை பாராட்ட வேண்டும் என்று நினைக்கின்றோம். வுhயவ ளை ர்ரஅயn யேவரசந. மனித இயல்பு அது. ஆனால் வேதம் என்ன சொல்கின்றது அப்படிப்பட்ட விஷயத்தில் நீங்கள் ஆர்வம் காட்டாதீhகள் அதெல்லாம் வீண் நம்மை புகழ்ந்தும முகஸ்துதித்து பேசுகிறவர்கள் கொஞ்ச நேரத்தில் தூசித்தும் பேசுவார்கள். எந்த விதத்திலும் இந்த உலகத்தின் மேன்மையின் மீதும் நமக்கொரு ஆசை வந்து விட கூடாது. ஊலக மக்கள் என்ன நினைக்pறார்கள் இந்த உலகத்தின் மேன்மைக்காக இன்மைக்குரிய ஆசீர்வாதங்னளுக்காதான் கிறிஸ்துவை பின் பற்றுகிறார்கள். இந்த உலகம் நம்மை பாராட்டா வேண்டாம். நமக்கு இந்த உலகத்திலே புகழ்ச்சி வேண்டாம் நம்முடைய மேன்மை கிறிஸ்முக்குள்ளதகவே இருக்கட்டும். ஒரு அருமையான வசனம்,
ஆகிலும் தங்களைத்தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டுஇ தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. 2கொரிந்தியர் 10:12
தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்கிறவர்கள் புத்திமான்கள் அல்ல, கர்த்தரால் புகழப்படுகின்றது உத்தமன் என்று அதிகாரத்தின் இறுதியிலே வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.

7. பரிசுத்தம்
இயேசு எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவர். அவரை போல யாரும் பரிசுத்தவான் இந்த பூமியில் இருக்க மாட்டார்கள். நான் பரிசுத்தர் ஆகவே நீங்கள் பரிசுத்தவானாக இறுங்கள்.
உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோலஇ நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர்இ ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.
1பேதுரு 1:15,16
ஆகையால்இ பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோலஇ நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். மத்தேயு 5:48
அவர் பூரண சற்குணராக இருக்கிறார். பரிசுத்தராக இருக்கிறார். கிறிஸ்த்துவை அறிந்து கொள்கிற நாம் அந்த பரிசுத்தத்தை பெற்றுக்கொண்டு வருகின்றோம். பரிசுத்தம் என்கிற விசயத்தில் தேவன் தனித்தன்மை வாய்ந்தவர். ஆகவேதான் அவருடைய ரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகின்றது.
கர்த்தாவேஇ நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணிஇ உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காகஇ

நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவிஇ உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். சங்கீதம்26:6-7
நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!எபிரேயர் 9:14,
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்துஇ தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணிஇ கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பானென்பதை யோசித்துப்பாருங்கள். எபிரேயர் 10:29
அந்தப்படியேஇ இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். எபிரேயர் 13:12

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கிஇ நம்மைச் சுத்திகரிக்கும். 1யோவான் 1:7
உண்மையுள்ள சாட்சியும்இ மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும்இ பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. வெளி 1:5
கிறிஸ்த்துவின் இரத்தம் நம்மை பரிசுத்தமாக்குகின்றது அவர் பரிசுத்தராக இருப்பதனால் அவரின் இரத்தம் பரிசுத்தமாக்குகின்றது அவரின் வசனங்கள் நம்மை பரிசுத்தமாக்குகஜன்றது.
உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். யோவான் 17:17
அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படிஇ அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்.யோவான் 17:19
ஆகையால்இ சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.எபேசியர் 5:24
அவருடைய சத்தியத்தால் பரிசுத்தமாக்குகிறார் அவருடைய வசனமே சத்தியம், அவருடைய பரிசுத்த ஆவியானவர் பரிசுத்தம் படுத்துகிறார்.
அப்படியிருந்தும்இ சகோதரரேஇ புறஜாதியாராகிய பலி பரிசுத்த ஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டுஇ தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்குஇ நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டுஇ
ரோமர் 15:15
கர்த்தருக்குப் பிரியமான சகோதரரேஇ நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும்இ சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்குஇ ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலேஇ நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 2தெசலோனிக்கேயர் 2:13

இந்த வசனங்கள் பரிசுத்த ஆவியினால் பரிசுத்தமாக்குகின்றது. அவர் பரிசுத்தமாக இருப்பதனாலே அவர் நம்மை பரிசுத்தமாக்குவதற்கு உண்மையுள்ளவராக இருக்கிறார். பரிசுத்தம் இல்லாமல் தேவனுக்காக எதையும் செய்ய முடியாது. என் வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாமல் நான் பரிசுத்தரான தெய்வத்தை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்த முடியாது. ஆகவே உம்மை போல என்னை பரிசுத்தம் உள்ளவனாக மாற்றும். ஆகவே பரிசுத்தம் என்பது கூட உடனே நமக்கு முழுமையாக கிடைத்து விடும் என்பது அல்ல. பரிசுத்தம் உள்ளவன் இன்னும் இந்த பூமியில் இருக்கின்ற வரை நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டும். கிறிஸ்துவின் சுபாவமான (இயேசுவின் தனித்தன்மை அல்லது தனித்துவம்) நமக்குள்ளும் இந்த சுபாவம் வரட்டும்.


(இலங்கை கிராமிய சுவிஷேச வேவையின் 18 வது வருட நிறைவை முன்னிட்டு கடந்த மே மாதம் 16,17,18- 2011 அன்று நுவரெலியாவில் நடந்த மிசனரி மகாநாட்க்காக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தேவ செய்தியாளர் சகோதரர் வே.கைவல்யம் டேவிட் ஆற்றிய உரையின் தொகுப்பு)
......................................................................................................

Saturday, May 14, 2011

Mother Teresa: In the Name of God's Poor (Part 1)

Poem by Mother Theresa

Tuesday, May 10, 2011

மஜித் மஜீதி: சினிமாவில் சூபி மொழியை பேசும் ஒரு ஆன்மீக கலைஞன்


majidi majidi“BARAN” என்ற திரைப்படம் ஒரு சூபி மகானின் நினைவு குறிப்பிலிருந்துதான் தொடங்குவதாக எனக்கு தோன்றுகிறத. இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அது நமது தேடலின் துாண்டலை தொடங்குவதற்கான உந்துதலை தந்தப்படியே இருக்கின்றது. இந்த உன்னதமான திரைகாவியம் சினிமா மொழியில் ஒரு நவீன கவிதை ஏற்படுத்தும் விபரிக்க தெரியாத உணர்வுகளை ஏற்படுத்து கின்றது.

வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத இந்த அற்புத காவியத்தை செதுக்கியவர் மஜித் மஜீதி என்கிற ஈரானிய திரைமேதை.

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் 1959ம் ஆண்டு மஜித் மஜீதி பிறந்தார் புதிய ஈரானிய சினிமாவில், தனித்துவமான புகழ் பெற்றவர்களில் மிக முக்கியமான இயக்குனர் மஜித் மஜீதி தெஹ்ரானில் வளர்ந்த அவர் தனது 14வது வயதிலேயே அமைச்சுர் நாடக குழுக்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தெஹ்ரானில் உள்ள நாடக கலை தொடர்பான கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயின்றார் ஈரானில் 1978ல் நடைப்பெற்ற உலகில் மிக முக்கிய மக்கள் புரட்சிகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு திரைப்படங்களின் பாத்திரமேற்று நடிக்கும் சூழல் அவருக்கு வாய்த்தது அதன் பின்பு சினிமா அவரின் வாழ்வின் மறுபகுதியாக மாறியது.

பல்வேறுவகைப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் முதன் முதலில் எழுதி இயக்கிய திரைப்படமான டீயுனுருமு (1991) 1992ம் ஆண்டில் கேன்ஸ் (ஊயுNNநுளு) திரைப்பட விழாவில் இயக்குனர்களுக்கான இருவார் சிறப்பு பிரிவில் கீழ் திரையிடப்பட்டதுடன், ஏராழமான தேசிய விருதுகளையும் அவருக்கு பெற்று தந்ததோடு, அவரை இயக்குனராக உலகிற்கு இனம் காட்டியது அவரது இரண்டாவது திரைப்படமான குயவாநச 1996 சென் செபஸ்டியன் திரைப்பட விழாவில் ஜுரி விருதைப்பெற்றது. இத்திரைப்பத்தின் கதையாடலும், பாரசிக இசையும் வாழ்வை அனுகிய விதமும் மிகவும் தனித்துவமானது.

அம்மாவின் இரண்டாம் கணவனாக வரும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கும் மகனுக்குமான மனபோராட்டம் எப்படி ஒரு நிலையில் எல்லாம் முடிவுக்கு வருகின்றது என்பதை மஜித் மஜீதி தனக்கே உரிய கவிதை மொழியில் திரைச்சட்டகத்தில் செதுக்கி செல்லும் உயிர்ப்பு நன்மை திகைக்கசெய்கின்றது. அதிகாரமும் திமிரும், கோபமும் மனிதனின் ஆன்மீக வெளிகளை இல்லாமல் செய்து விடுவதை ஒரு பக்கம் விபரித்தாலும், அன்பு மட்டும்தான் மனிதனின் ஜீவியத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் என்பதோடு, இந்த திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் ருஷ்ய மகா கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி சொல்லி சென்ற வாக்கு மூலம் தான் நினைவுக்கு வருகின்றது. “சந்தோசத்தை போலவே வேதனையும் மனிதனை சித்தப்படுத்துகிறது…” என்பதாக ”தந்தை” திரைப்படம் சொல்லும் முக்கிய செய்திகளும் இதுதான் மனிதனாள் பெறமுடியாததும் தொலைக்க முடியாததும் அன்பு மட்டும் தான் அன்பு தான் எல்லாமே என்பதை பற்றிதான் இவரின் இந்த திரைப்படமும் பேசுகின்றது. இவரின் சினிமா மொழி மலர்ந்த ரோஜாவை போல் தனித்துவமானது. பணியில் புத்த கனகாமரப்புக்களை போல் மனிதனின் ஆழ்மன வெளிகளில் என்றும் மறக்காத தடங்களை ஏற்படுத்த வல்லது. இவரின் திரைப்படங்களை ஒருவன் பார்க்க தொடங்கி விட்டால், பின்பு என்றுமும் மற்ற சினிமாக்கள் அவனுள் அவனை தொலைக்காது.

மஜீதி, மொண்ரியல் உலகத் திரைப்பட விழாவில் அமெரிக்க கிராண்ட்பிரிக்ஸ்” விருதை ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வென்றுள்ளார். அவ்விழாவில் 1997ல் அவரது சிறப்பான திரைப்படமான (சொர்க்கத்தின் குழந்தைகள்) முதல் முறையாக அப்பரிசை வென்றது. உலகத்தில் பத்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்றுதான் சொல் தோன்றுகின்றது. இந்த திரைப்படம் நமது பார்வையாளர்களுக்கு இரு வேறு விதமான

நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒன்று நல்ல சினிமா என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தையும், ஞானத்தை யும்” சொல்லி தருவதோடு “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும் பென்சிலும் எப்படி எளிதாகக் கிடைக்கிறதோ அது போல சினிமா என்று சாத்தியமாகிறதோ, அந்த நாளில்தான் அது சாமன்யமனிதனின் கலை வடிவமாக அங்கிகரிக்கப்படும்.” என்று பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ழான் காத்து கனவு கண்டது போல் பார்வையாளனையும் படைப்பாளியாக மாற்றிவிடும் சாகா வரம் பெற்ற படைப்பு இது. இந்த திரைப்படத்தை தான் நான் எனது திரைப்பட காட்சிகளில் ஒழுங்கு செய்யும் போது எப்போதும் முன்னிரிமை கொடுத்து திரையிடுவதுண்டு, நமது நாட்டில் இந்த திரைப்படத்தை பல்வேறு வகையினருக்கும் பல்வேறு இடங்களிலும் மல்டிமீடியோ புரஜெக்டர் மூலமாக திரையிட்டு காட்டி கலந்துரையாடலின் போது மற்க்காத சில அற்புதமான வார்த்தைகளையும், நல்ல சினிமா மேல் நம் மக்கள் வைத்திருக்கும் பரஸ்பரமான அன்பையும் அபிமானத்தையும் கண்டு திகைத்திருக்கிறேன்.

இத்திரைப்படத்தை பள்ளி உயர்தர மாணவர் களுக்கும், ஆசிரியர்களும் திரையிட்டு காட்டிய போது “தாங்கள் வாழ்நாளில் இப்படியொருதிரைப்படத்தை பார்த்தில்லை என்றும் இப்படியெல்லாம் கூட திரைப்படங்கள் இருக்கின்றதா என்று வியந்து நமது தமிழக சினிமா ஏற்படுத்தியிருக்கும் மாய வலை பின்னலையும், நம்மை மந்தைகளாக வைத்திருக்கும் சூழலையும் குறித்து பேசி ஆதங்கத்தை தெரிவித்தார்கள்.

மஜித் மஜீதியின் (சொர்க்கத்தின் குழந்தைகள்) திரைப்படம் அமெரிக்க பல்கலைகழகத்திலும் மெக்ஸிகோ, மற்றும் ஜப்பானிய பல்கலைக்கழகத்திலும் திரைப்படத்துறை சம்பந்தமான பாட திட்டத்தில் ஒரு பாடமாக அதன் திரைக்கதை இணைக்கப்பட்டிருக்கின்ற செய்திகளோடு, சினாவில்; நடக்க இருக்கின்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய ஒரு குறும்படத்தை உருவாக்கி தருவதற்கு சீன அரசாங்கம் மஜித் மஜீதை வரவேற்றிருக்கின்றது. அப்படம் அவர் தற்சமயம் செய்து வருகின்ற படம்.

மஜீதி 1999ல் the color of paridise (சொர்க்கத்தின் நிறம்) என்ற திரைப்படத்திற்கு இரண்டாவது முறையாகவும் “அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ்” விருதை பெற்றார்கள் இப்படமும் அவரின் மனித நேயத்தையும், சூபி வாழ்வில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த தேடலையும் வெளிப் படுத்தினாலும், அன்பின் சுவரோவியங்களாக இப்படம் கண்கள் குருடான ஒரு சிறுவனின் வண்ணங்களையும், வாழ்க்கையையும் உயிரை உறுக்கும் வகையில் பேசிய திரைப்படம் . இந்த திரைப்படம் ஒன்றை மட்டும் பார்ப்பவர்களால் கண் தெரியாத, குருடர்களையும் விளம்பு மனிதர்களையும் கருணையுடனும், அன்புடனும் உலகத்தை, வாழ்வை தன்னை நேசிக்க தொடங்கி விடுவார்கள் சொர்க்கத்தின் நிறம் கண் இருந்தும் குருடர்களாக வாழும் மனிதர்களின் வண்ணத்தை மாற்றக் கூடிய திரைப்படம்.

மூன்றாவது முறையாகவும் “அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ்” விருதை டீயுசுயுN என்ற திரைப்படமும், ஹங்கேரிய திரைப்படமான வுழுசுணுழுமு (கைவிடப்பட்டவர்கள்) என்ற திரைப்படத்தின் இயக்குனர் அர்பாட் சாப்சிட்சுடன் மஜித் மஜீதி பகிர்ந்து னொண்டார். சொந்த நாட்டிலேயே ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள டீயுசுயுN நீய10யார்க்கில் செப்படம்பர் 11ல் நிகழ்ந்த சம்பவங்களின் காரணமாக ஒரு சிறப்பான அர்த்தம் பெற்று அந்த ஆண்டின் மிகுந்த வெற்றிகரமான திரைப்படமாகவும் பல்வேறு சிறந்த விருதுகளை இப்படம் அள்ளி குவித்தது. இத்திரைப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது. ஈரானின் பலவீனமான பொருளாதாரத்தில் ஆப்கானிய அகதிகளின் சுமை காரணமாக ஏற்படும் உண்மையான சமூக பொருளாதார பிரச்சினை குறித்த ஒரு கதை@ மோசமான அரசியலுக்குப் பலியான இரு இளம் உள்ளங்களுக்கு இடையிலான ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாத காதல் கதை. ஆன்மாவின் துாய்மையை அடைவதற்கான பாதையை சுயதியாகத்தின் மூலமே எட்ட முடியும் என்பதை நுட்பமாக சொல்லும் ஒரு சூபித்துவ தேடலுக்கான கதை என்பதாக அமைகின்றது.


பரான் தலைப்பிற்கு இரு பொருள் உள்ளது. ஒரு பெண்ணின் பெயராகவும் பெர்சியா (பாரசீகம்) மொழியில் “மழை” எனவும் பொருள்படுகிறது. அம்மழை என்பது பரான் ஈரானை விட்டுச் செல்லும், லதீப் ஆன்ம முதிர்ச்சியை அடையும் வசந்த காலத்தின் ஒரு குறியீடாக உள்ளது. அவர்கள் பிரியும் அந்தக் கணத்தில், லதீப் ஈரானை நோக்கி திரும்பிச் செல்லும் முன், மழை நீர்த்துளிகள் களி மண்ணில் பதிந்துள்ள பாரனின் புறாக்களும் தீனி கொடுத்த பொழுது கேட்ட மென்மையான புறாக்களின் சிறகொலி மீண்டும் பரான் பர்தாவை அணிந்து கொள்ளும் பொழுது ஒலிக்கிறது, லத்தீப்பால் என்றென்றும் அவளை மீண்டும் பார்க்க இயலாது. ஆனால் அவளது நினைவு ஆத்மாவிற்கு வழிகாட்டும் ஒரு ஒளியாக அவனுள் நிரந்தரமாக கலைத்திருக்கும்…. என்ற காவிய பாஷையுடன் பரானின் தாக்கம் என் இருதயத்தில் இன்னும் இருக்கின்றது. இதுபோன்ற மிகவும் அற்புதமான திரைப்படத்தை வாழ்வில் இனியும் பார்க்க கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு அன்மையில் எனக்கொரு மின் அஞ்சல் வந்திருந்தது, அதன் தலைப்பு இதுதான் “ஆயிரம் திரைப் படங்களை பார் அதன் பின்பு சாகு” என்பதாக இருந்தது. என் மனம் சொல்லி கொண்டது. கிட்டதட்ட எனது மரணம் கூட விரைவாக வருவதென்றால் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் ஏரத்தாழ ஆயிரம் நல்ல சினிமாவை பார்த்த எனது திருப்தி என ஆத்மாவை சாந்தியடைய செய்யும் என்று நம்புகிறேன், ஆகவே நல்ல சினிமாவை பார்க்காமல் மரணம் தேடும் நபர்களை நினைத்து பெரிதாக கவலையடைகிறேன். வாழ்வில் ஒரே ஒரு தரமாவது நல்ல சினிமாவை தேடி சென்று பாருங்கள் அது உங்கள் வாழ்வின் மகத்தான மறக்க முடியாத நிமிடங்களாக கருணங்களாக மாறும் என்று உறுதியாக எழுதி வைப்பதோடு, முக்கியமாக மஜித் மஜீதியின் இந்த கட்டுரையில் விபரித்த நான்கு திரைப்படங்களும் அதிஷ்டவசமாக கொழும்பில் தமிழ் உப தலைப்புடன் வடிவில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரிலிருக்கும் பாம்லீஃப் இஸ்லாமிய உணவகத்தில் கிடைக்கிறது. புறக்கோட்டை நடைபாதை கடைகளின் இரைச்சலில் நாம் அலைந்து எவ்வளவோ தேவையும், தேவையற்றதுமான பொருட்களை வாங்கி குவிக்கின்றோம், ஆனால் இந்த பொருட்களுடன் நாம் எந்த விதமான நெருக்கத்தையும் பாராட்டுவதில்லை, ஆனால் சூபிமகானான இயக்குனர் மஜித் மஜீதியின் இந்த திரைப்படங்களை வாங்கும் உங்களின் வாழ் நாளில் ஆத்மாவின் தொலைந்து போன சங்கீதத்தை தேடி கண்டடைவீர்கள் என்பதை அவரின் சூபி மொழியில் மழையில் நனையம் ஆத்மாவை சினிமாவின் மூலம் நம்மை நமக்கு அருகாமையில் கொண்டு வருவதோடு, நாம் “அன்பு” பற்றிய தொலைந்த புல்லாங்குழலை தேடி தருவதோடு, நம்மை புல்லாங்குழவன் ஆத்மீக இசையினால் அவரின் உன்னதமான திரைப்படங்கள் பூக்கும் ப10வை போல வைத்திருக்கும்.

நன்றி:வீரகேசரி

மன்னியுங்கள் என் ப்ரியங்களே...!சாமானியனின் மனதோடு
ஒவ்வொரு கனமும் முண்டியடித்து
எழுந்திருப்பதில் காயங்களை
நண்பர்களுக்கு தருவதோடு
தினப்படி வாடிக்கையாகி விட்டது
என் மன வழக்கமாகி வருவதை
தடுத்து விட முடியாத விஷ ஜந்துக்களை
நான் ஏன் வளர்த்து வருகிறேன்
என்பது எனக்கும் பரியவில்லை...

நான்
தடுமாறிய நிமிசங்களில்
என் கால்கள் மட்டுமல்ல
சக பயணியின் செருப்பும்
அறுந்து போவதை என்னால்
ஏனறிய மனமில்லை...

ஒரு நிமிசம்
போர்களில் வீரியம்
சாலையெங்கும் உயிரின் வலியை
தாங்காது உடைப்பெடுக்கும்
குளத்தின் நீரில்
நனைவது ஏனோ என்
சந்தோசமற்ற சின்ன மனசுதான்
தோழனே....!

எத்தனை முறை என்
காயங்களை குணப்படுத்தியுள்ளாய்
ஆனாலும் எப்படிதான்
நீ என்னை சகித்துக் கொள்கிறாய்
சகோதரா...?
உன்னிருந்து நான்
அன்பை தவிற எதை
நான் கற்பது தோழனே...

அன்பை கற்பது இத்தனை
கடினமானதென்று இப்போதுதான்
அறிகிறேன்...
அன்பே இல்லாத
என்னிடம் நீ
எப்படியெல்லாம் அன்பை
பரிமாறுகிறாய்....

இருத்தலின் வலியை
மறக்க வைக்காத
என் உள்ளோடும் நாடாவில்
கண்ணீருடன் கனத்த
ஹிருதயத்தையும்
நீ தினம் தினம் எனக்கு
தந்து விடுகிறாய் நண்பா...

மௌனம் அறுக்கும்
அன்பைப்பற்றி பேசாத நாளில்
உயிரின் வலியை சுவாசிக்கதான்
உன்னுடன் பேச
மறுக்காத இந்த தினங்கள்
என் வாழ்க்கை பள்ளியில்
நீயும் எனது ஆசானாக ஆகி
போகிறாய்..
நான்தான் இயேசுவோடு கூட நடந்தும்
உன் அன்புக்கு முன்பு
பரி்சையில் தோல்வியுற்ற
கடைசி பெஜ் மாணவனாக...
எதுவரையோ என்னது வரையோ....!!!
000

(முஷர்ரப் முதுநபீன் என்ற என் நண்பனுக்கு.....)


Wednesday, April 27, 2011

நீ எழுதும் கவிதை.....ஞாபகத்தின் கோடுகள் உன்
பால் மனம் மாறாத கருணையை
என் தாகம் கொண்ட ஏகாந்த மனதில்
மழையின் சாரலை துாவுகின்றது
என் ப்ரியத்துக்குரிய ப்ரியமே....

சற்றெ வந்தாய் சலனத்தின்
ரேகைகளை அத்தனை அழுத்தமாக
உன்னால எப்படி பெண்னே பதிக்க
முடிகின்றது....

இருவரும் ஓரே நேர் கோட்டில்
சந்தித்த காலத்தின் தீராத புதிரை
இனி என் இரவுகள்
நதியின் பள்ளத்தாக்கில்
விழுந்த படகைப் போல
நீ
மனதின் பாடலை ஏன்
சந்தியா ராகத்தில்
புனைந்தாய்.....?

மறுமுறையும் மறுமணம்
சாத்தியத்தின் வாசல்
உன்னால் உத்தரவு பெற்றால்
நான் சாகாது உன்னில்
இறுதி வரையும் வருவேன்
உன் கைப்பிடித்து -------------
நம் வானத்தின் ஓர் அழகிய
பட்டமாவான்.....
நீ
புதிர்களை என்னிடம்
முழுவதுமாக அவிழ்கும் போது
இரவுகளின் சாரளம்
நம் இருவரின் துயர கவிதையை
வானத்தின் நீளம் போல்..
என் சலனமுள்ள தனிமை காலம்
இனி உன் தோழின் ஸ்பரிசத்தில்
சாய்ந்து..சாய்ந்து....
நாம் ஆகாயத்தின் நீளமெங்கும் பதிக்கும்
உயிரை உன் பளிங்கு இதயத்துடன்
முத்தமிட்டு பதிக்க என் அகதி மனம்
ஆசையுடன் துடிக்கின்றது பெண்னே....

நீ
இனி என்ன பேசுவாயோ....
அது என்னை குறித்து
பேசுவாயா...இல்லை
இனியும் நான் தனித்து வாழும்
தீவுகளின் பேய்களுடன்
திருமணமா....
புரியவில்லை இன்னும்
நீ வானில் சலனமில்லா
நிலவாக வருகின்றாய்...
கவிதைகளினால் என் .இரவுகளில்
உன் தாதி முகம் என்
நோயை குணப்படுத்துகின்றது செல்லமே....

டியர் என்ற உன்
வார்த்தைகள் என்னில் ஓர்
அனலாக எரிக்கினறதுஎன்பதை நீ
அறிவாயா அனபே.....?
..................................................................
இரவு: 11.59 / 25/04/2011

Monday, April 25, 2011

அன்பின் மொழியை பேசும் ஆகாயப் பூக்கள்


பிரசன்ன விதானகே

திரைப்படம் குறித்த மனப்பதிவு

மாரி மகேந்திரன்


ரு திரைப்படம் வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம் வெறும் மனோ நிலை சார்ந்ததாக மட்டும் முடிந்து போவதில்லை. அது உணர்வுகளின் மீதும், உள்ளே – வெளியே என்கிற வாழ்வின் இருவேறு பகுதிகளின் மீதும் தன் அழுத்தமான பதிவை வைத்து விட்டுத்தான் போகின்றது. எல்லா திரைப்படங்களும் மனித மூளையின் ஒரு பகுதியில் பிம்பங்களாகித்தான் போகின்றது. ஆனால் திரைப்படத்தின் பிம்பங்களும் தன் சுயமான வாழ்க்கைக்கும் தொடர்புகள் ஏதுமற்று போனதாக மனிதன் நம்புவதுதான் கேலிக்குரிய விடயம். ஏனென்றால் நல்ல திரைப்படமோ அல்லது மோசமான திரைப்படமோ மனிதனின் உணர்வுகளை பாதிக்கவே செய்கின்றது. அந்த தாக்கத்தின் நெறிஞ்சி முள் என்பது வண்ணாத்தி பூச்சிக்கள் அமர்ந்து செல்லும் தடத்தை போல சலனமற்ற ஓர் மருட்சியை ஏற்படுத்துவதுதான் திரைமொழியின் உள்ளீடான தொனி. 'ஆகாயப் பூக்கள்' திரைப்படமும் இப்படியான தாக்குதலை சுவடுகள் ஏதுமற்று செய்து விட்டதன் மன அவஸ்தையின் வலிகள் தான் இந்த கட்டுரைக்கான காரணங்களும்.கொழும்பு நகரத்தில் வசிக்கும் தற்காலிகமான தற்சமயத்து வாழக்கையின் நிர்ப்பந்தமும் தனிமையும் நல்ல திரைப்படத்திற்கான வாய்ப்புகளுக்கு வழியேதும் இல்லாத போதும், ஒரு நல்ல திரைப்படம் பார்க்க கூட வாழ்வில் பாக்கியமற்ற துர்ப்பாக்கி;யம் ஒரு பக்கம் மனோ விரக்தியையும் சூனியத்தையும் - தந்தாலும் பிரசன்ன விதானகே போன்ற சில கலை ஆத்மாக்கள் இந்த நாட்டில் இருப்பதன் வாசனையின் சந்தமாக ஓர் சந்தோஷம் அவர்களின் படங்களாவது திரையரங்குகளில் வெளியாகி நம்பிக்கையை கொஞ்சம் தற்காத்து கொள்ள செய்வது மனதிற்கு சற்று நிம்மதி.

அதே நேரம் கொழும்பில் உள்ள ஒரு திரையரங்கில் ஆகாய பூக்கள் மொழி மாற்றம் செய்யப்பட்ட சில திரைப்படத்தை ஒரு மதிய நேர காட்சிக்காக நானும் எனது நண்பர்களும் சென்றிருந்த போது மூன்று பேருக்காக ஷோ போட முடியாது. ஆறு பேர் இருந்தால் ஷோ போடுவோம் என்பதாக கூறினார்கள். அதே நேரம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படம் அன்றுதான் திரையரங்கிற்கு வந்திருந்தது. டிக்கட் கவுண்டரில் மாப்பிள்ளை படத்திற்கான வசூல் முந்திக்கொண்டு போய் கொண்டிருக்க 'ஆகாயப் பூக்களின்' திரையரங்குகளின் இருக்கைகள் காலியாகவே இருப்பதை பார்க்க மனதில் ஓர் வருத்தம் மெதுவாக ஏற்பட்டு தொடர்வதை உணர முடிந்தது. அத்தோடு வாசலில் டிக்கட் கவுண்டரில் இருப்பவர் திரையரங்கு முகாமையாளரிடம் சென்று பேசும்படி கூறிய பிறகு முகாமையாளர் நம்முடைய ஆர்வத்தையும் சங்கடத்தையும் கண்டு 6 டிக்கட் சரி விற்பனையானால்தான் திரைப்படத்தை காட்சிப்படுத்த முடியும் என்று கூறி விட்டு நம்மை யாரையாவது சென்று அழைத்து வரும்படி சொன்னார். நானும் திரையரங்கின் வாசலின் முன் வந்து சுற்றிச் சென்று பார்த்து விட்டு இயலாமையுடன் திரும்பினேன். நண்பரின் நண்பர் ஒருவர் படம் பார்க்க வந்திருந்தார். அவரும் ஆகாயப் பூக்கள் பார்க்கும் எண்ணத்தில் வந்திருந்தது சற்று சந்தோசம், இப்போது நால்வர், இன்னும் இருவருக்கான டிக்கட்டையும் சேர்த்து எடுத்து கொண்டு படத்தை பார்க்க சென்றோம்.

எனக்கு சாந்தால் அகர்மானின் JEANNE Dilian திரைப்படத்தை கேரள திரையரங்கில் பார்த்த ஞாபகம் தான் நினைவுக்கு வந்தது. அந்த படம் 3 மணி நேரத் திரைப்படம். கேரள திரைப்பட விழாவில் அவரின் முழுப்படத்தின் மீள் பார்வை என்ற பகுதிக்குள் அவரின் முழுமையான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அங்கு வந்திருந்த பார்வையாளர்கள் 10 பேர் தான். அந்த படம் தொடங்கி அரைவாசி நேரத்தில் 3 பேர் மட்டும் தான் மிஞ்சினார்கள். அதில் மூன்றாவதாக நான் மட்டும் வெதும்பி தனிமையில் இருந்தது ஞாபகத்தில் கோடு போல் வந்தது. சாந்தால் அகர்மானின் திரைப்படம் பெண்ணிய மொழியை திரையில் ஆய்வு செய்கின்றது. அவரின் மொழியே தனித்துவமானது. அதனால் தான் அவர் இது வரையும் சர்ச்சைக்குரிய திரைப்பட இயக்குனராக வலம் வருகின்றார். மாறாக ஆகாயப் பூக்களும் பெண்களின் தனிமையையும் வலியையும் ஆணின் மொழியில் சொன்னாலும் பிரசன்ன விதானகேயிடம் இயல்பாக இருக்கும் அன்பின் மூலமாக இத் திரைப்படத்தை நாம் மிக அருகில் சென்று பார்க்க சொல்கின்றது. அவரின் திரைப்படங்கள் அனைத்தும் ஒரு ஞானியின் மனோ பாவத்துடன் அனுகப்படுவதனால்தான் இப்படங்கள் உணர்வுகளில் கலந்து மரணத்தின் வேதனையையும் குற்ற உணர்வுகளில் முக்ததை நம் வாழ்க்கையில் அன்றாட நிகழ் பதிவில் கண்ணாடியாக முன் நிறுத்தி நம்மையே நமக்கு சுட்டிக்காட்டி இனி வரும் திசைக்கான பயணத்தை தீர்மானிக்கின்றது. இதனால் தான் இவரின் திரைப்படத்தை பார்க்க இந்த சராசரி பார்வையாளர்களுக்கு பெலன் இல்லாமல் போய்விடுகின்றதோ என்று கூட நான் சிந்திக்கின்றேன்.

மற்றும் இத் திரைப்படம் பெண் பற்றிய சமூக பார்வைகளை உடைத்தெறிவது ஏனோ ஆண்மையை மனங்களுக்கு ஒரு நெருடலையும் தனிமையும் கருத்துகள் நிர்மூலமாகி போவதற்கான சூழலையும் ஏற்படுத்தலாம். பொதுவாகவே கதாபாத்திரங்கள் உணர்வுகளின் மீது பிரசன்ன பயணிக்கும் பயணம் கடினமானதாக தோன்றுகின்றது. ஏனென்றால் சமூகத்தின் தீர்மானம் நல்லதும், கெட்டதும், நல்லவன், கெட்டவன் என்ற பொதுப்படையான முன் தீர்மானிப்பதனால் ஏற்படும் ஆழமான வன்முறையை இவர் தன் திரைப்படத்திலிருந்து மிகவும் மெதுவாகவும் இலகுவாகவும் கடந்து போய் விடுகின்றார். இது இவர் மனதிலும் வாழ்விலும் கொண்டிருக்கும் அதி அற்புதமான அன்பு மொழிதான் இப்படி கடக்க செய்கின்றது. வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் பிரசன்ன என்கிற அற்புதமான மனிதன் தன் பதிவை திரையின் கவிதைகளாக எல்லோரின் மொழியாக அன்பை மட்டும் விட்டு விட்டு செல்வதனால்தான் அவரின் திரைப்படங்கள் மொழி, உணர்வு, மற்றும் சமூகம் தந்திருக்கும் முக மூடிகளை கலைந்து சாகா வரம் பெற்ற படைப்பாக நம் முன் நிழலாடிச் செல்கின்றது. மற்ற திரைப்படங்கள் உடலோடு முடிகின்றது. இவரின் திரைப்படங்கள் ஆத்மாவின் கூடுகளை பிரித்து எப்போதும் தன் சுயத்தை தேடி பயணிக்கின்றது. கலையும், சினிமாவும் வாழ்க்கையும் மனிதனையும் குறித்து பேசா விட்டால் அது வெறும் சக்கை தான். அதனால் அந்த சினிமாவுக்கோ சினிமா கலைஞனுக்கோ எந்தவொரு பயனும் இல்லாதது வருத்தமே. நிறைய தமிழ் சினிமாக்களின் நிலை இது தானே.

                    
நானொரு பெண்ணிய இயக்குநரா என்று
மற்றவர்கள் என்னிடம் கேட்கும்பொழுது:
'நான் ஒரு பெண். நான் சினிமாக்களும் எடுக்கிறேன்;'
-சாந்தால் அகர்மான்-

எனறு சாந்தால் அகர்மானின் மேற்கோள் கூட இதைதானே உறுதிப்படுத்துகின்றது. மனிதனை ஆழமாக நேசிக்கும் போதும் வேறுபாடுகள் கடந்து போகின்றது என்பதற்கு இது போன்ற இயக்குனர்களின் படைப்பும் வாழ்க்கையும் தான் நமக்கு இருக்கின்ற மிக முக்கியமான சாட்சிகள்.

'உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்காக நன்றி செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக, உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். என்ற வேதாகம வசனம் கூட இதைதான் நினைவுபடுத்துகின்றது. மனிதன் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாக இத் திரைப்படம் பிரசன்னவின் ஆழமான அன்பின் மொழியை திரையில் பேசிவிட்டு செல்கின்றது. அதனால்தான் அது நமக்கு அண்மையில் வந்து கண்ணீரையும் கனத்த கருத்தையும் தருகின்றது.

மாலினி பொன்சேகாவின் திரை உலக பிரவேசத்தின் உண்மைத் தன்மையையும், புனைவையும் இணைத்து நமக்குள் திரையுலக வாழ்க்கையின் 'பெண்' என்ற கதாபாத்திரம் வகிக்கும் பங்கையும் திரைப்பட உலகம் பெண்ணின் உடலை சுவைக்கும் மாயங்களின் பேய் கூடம் என்பதற்கான ஆதாரங்களுடன், திரைப்பட உலகம் மட்டுமல்ல சமூகம் பெண்ணுக்கான தனித்துவத்தை எப்போதும் மறுத்து வருவதை இப்படம் உள்ளீடாக சொன்னாலும் படத்தில் வரும் இரவு விடுதியின் பெண்களின் வாழ்க்கையை பிரசன்ன மனித நேயத்துடன் அவர் கூறும் ஆத்மாவின் வலியும், பேச முடியாத கனங்களும் வாழ்க்கையில் நாம் வைத்திருக்கும் பொதுவான பார்வை என்பது, தெருக்களில், வங்கியில், பஸ் பயணத்தில், ரயிலில் , சாலைகளில் தரித்து நிற்கும் வாகனங்களின் ஜன்னல் கண்ணாடி வழியாக நாம் பார்க்கும் 'பெண்' என்ற வஸ்துவை குறித்த ஆண்மையின் பார்வை என்பது 'வேசித்தனம் பண்ணுபவள்' தானே என்ற உள்ளிருந்து வெளிப்படும் சமூக மனத்தின் வெளிப்பாட்டையும் முன் தீர்மானிப்பதை இப்படம் அசைப்பதுதான் சிறப்பு. நிம்மி ஹரஸ்கம என்ற பெண்ணின் நேர்த்தியான நடிப்பை எப்போதும் பாராட்டித்தான் ஆக வேண்டும். இவரின் யுரபரளவ ளரn திரைப்படம் இன்னும் மறக்க முடியாது. இவர் மனோ நிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதம் நம் இருதயத்தையும் அதன் கருத்தாக்கங்களையும் அசைக்கின்றது. மிக நீண்ட இடைவெளிகளுக்கு பின்பு ஒரு சிறந்த நடிகையை சிங்கள திரையும் பெற்றிருக்கின்றது. ஆனால் சிறந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் தன் ஆளுமையை செலுத்த முடியாமல் போவதுதான் மன வருத்தமானதொன்று. நல்ல சினிமா அன்பை போல் கொஞ்சமாகத்தான் இருக்கின்றது. அது ஆகாயம் போல பூக்கும் போது நட்;சத்திரங்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல நம் வாழ்க்கையிலும் வண்ண கனவுகளையும் கைகூட செய்யும் எனது உறுதி.

ஆகாயத்துப் பூக்கள் பெற்ற சர்வதேச விருதுகள்..

வெள்ளி மயில் விருது – மாலினி பொன்சேகா
2008 சர்வதேச இந்திய திரைப்பட விழா

சிறந்த நடிகை – மாலினி பொன்சேகா
2009 சர்வதேச லெவாந்தே திரைப்பட விழா - இத்தாலி

ஆசியாவின் சிறந்த திரைப்படத்திற்கான நெட்பெக் விருது
2009 க்ரணாடா சர்வதேச திரைப்பட விழா - ஸ்பெயின்

ஜூரியின் கௌரவிப்பு
2009 பிரெஞ்சு நாட்டு வெசூல் சர்வதேச திரைப்பட விழா
..................................................................................................................................................................

மழை...........
மழையின் சுவாசம்
அவளின் ஸ்பரிசத்தின் தடத்தை
முன்னொரு முறை இடைவேளை வரை
முடிக்காத மழை ஞாபகத்தின்
சலனம் வரும்
இசையின் சாரல் என்
பாடலின் கடைசி சந்தமும்
உன் கவிதையின் புணர்ச்சி மனமும்
தாலாட்டின் கதைகளை சொல்கிறது...
மழைக்கா ஏங்கியவர்கள் பின்
மழைக்கா காலத்தில்
பிரிந்தார்கள்...
அவர்கள் கொண்டு வந்திருந்
குடையின் விரிசல்கள்
வாசலில ....
தனிமையை துயரமாக
உன் கவிதையையும்
எடுத்துக்கொண்டு பயனிக்கின்றது
சேகியே....

பின்குறிப்பு-
மெல்லிய வரிகள் தந்த கவிதைகள்.

மாலை 6.19......

Friday, April 22, 2011

இயேசுவின் பரம அன்பு...
ஒரு சாட்சி

மாரி மகேந்திரன்

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்இ தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:36இ37 (ஆயசம 8:36இ37)

சினிமா என்ற ஓர் வஸ்து எனக்குள் எப்படி வேர்கொண்டது என்பதைப் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. என்னை சினிமாவுக்குள் இழுத்து சென்றது எது? ஏன் சினிமாவை, கலையை வாழ்வாக ஆக்கிக்கொள்ள துணிவு ஏற்பட்டது. சினிமாவை வாழ்வாக ஆக்கிக் கொண்டதனால் இழந்தவைகள் அனேகம் ஆனாலும்.

சுpனிமா என்கிற வசீகரிக்கும் ஆயுதம் என் இருதயத்தை பிடித்து இழுத்து சென்றது ஏன்? எது?. எல்லோரிடமும் ஒரு பெலவீனம் உண்டு. அது போல் என்னிடத்திலும் சினிமா ஒரு பெலவீனமாகத்தான் குடிகொண்டுள்ளது. சினிமாவில் நான் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. (அது கூட நல்லதற்குத்தான் என்பது வேறு விடயம்) ஆனால் இந்த சினிமாவின் மீது எனக்குள்ள ஆசை வர காரணமாக இருந்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை நான் கண்டடைய சுமார் ஒரு 20 வருடத்தையும் தாண்டி செலவளித்து விட்டேன். இதற்கான பதிலை நான் கண்ட போதுதான். எனக்குள் ஒரு ஒளி உட்புகுந்து என்னை பெலப்படுத்தியது. அந்த பதில் இதுதான்.

நசரேத்தூர் இயேசு ((JESUS OF NAZARETH) ) இந்த திரைப்படம் தான் என் வாழ்க்கையை திரைப்படத்துறை நோக்கி அழைத்து சென்றது. திரைப்படத்தை கண்ணும் கருத்துமாக நேசிக்க வைத்தது. இப்படம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப் படத்தை ஃவிறாங்கோ ஸெவிஹெல்வி என்ற இயக்குநர் உருவாக்கியிருந்தார். இதில் இயேசு நாதராக ஹொபேட் போவேல் நடித்திருந்தார். 397 நிமிடங்கள் கொண்ட இத்திரைக் காவியம் பார்ப்பவர்களின் இதய கிடங்கை வலுவாக தாக்க கூடியது. இத் திரைப்படம் இன்று வரை இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகம் வரை வெளிவந்துவிட்டது. ஆனால் நான் எனது பள்ளிக்காலத்தில் பார்த்த முதல் திரைக்காவியம் இப்படம் தான். இத்திரைப்படம் என்றும் என் வாழ் நாளில் மறக்கவே முடியாத படிக்கு மானசீகமானதொரு வலியை என் விபரம் புரியாத வயதில் ஏற்படுத்தியிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. திரைப்படம் என்ற போது பொதுவாக மக்களின் மனதை தாக்க கூடியதுதான். ஆனால் 'திரைப்படம்' என்ற அளவில் இப்படம் என் மனதை தாக்கவில்லை. இயேசுவின் சிலுவைப்பாடுகள், அதைக் காட்சிப்படுத்தும் விதம், அவரின் சுவிஷேசம், யூதாசின் காட்டிக்கொடுப்பு என்று இன்றும் என் மன கண்ணிலிருந்து பிரிக்க முடியாத படிக்கு இப்படம் என்னுள் என் மனசாட்சிகளை விழிக்க வைக்கிறது. இயேசுவின் கல்வாரியின் இரத்தம் பாவிகளின் இருதயத்தையே ஒரு கணம் ஸ்தம்பிதம்படுத்தும். நான் இப்படத்தை பார்க்கும் போது ஆண்டு 2 அல்லது 3இல் தான் கல்வி கற்றிருப்பேன். இப்படத்தை யுழுபு சபையினால் தான் பாடசாலையில் திரையிட்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்து இருந்தது. படத்தை பார்த்துவிட்டு நான் வீட்டிற்கு சென்ற போது அம்மா ஏன் தம்பி இப்படி மழையில் நனைந்துகொண்டு வருகிறாய். என்று கேட்டுவிட்டு எங்கே குடை என்ற போதுதான் எனக்கு நான் மழையில் நனைந்தது தெரிய வந்தது. அந்த வயதில் நான் கொண்டு போயிருந்த அந்த கருப்பு குடை தொலைந்து போய்விட்டது. பசுமையும், இளமையும் மாறாத என் பால்ய வயதில் இளம் பிராயத்தில் தொலைக்க முடியாத இயேசுவின் அன்பு மழையை சுவைக்க தெரிந்திருந்ததே என்பதை நினைக்கும் போது, இன்றும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு பின்பு தான் நான் சினிமாவின் மீது மோகம் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களை தேடிப்பார்க்க தொடங்கிய காலங்கள் இதுவரை சினிமாவுக்கான புள்ளியை எண்ணில் விதைத்தவர் இயேசுவே.

ஆனால் அதற்கு பின்பு நான் சினிமா மீது கொண்ட காதலினால் தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து ஒரு நடிகனாக வர நினைத்தேன். ஆனாலும் நடிகனாக அழகு வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் இயக்குனராக வரலாம் என்பதற்கான முயற்சியுடன் இந்தியாவிற்கு சென்று திரைப்படத் துறையில் முயற்சி செய்யலாம் என்பதற்கான உத்வேகத்துடன் தமிழ் நாட்டிற்கு 1996 ஆம் ஆண்டு பயணமானேன். நல்ல சினிமா மீது எனக்கிருந்த ஈடுபாடு அங்கு சென்ற பின்பு சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தது. இந்த உடைவு என்பது வெறுமனே நோக்கத்தை மட்டுமல்ல வாழ்வின் மீதும் வெறுமையை சூழச் செய்தது. அண்மையில் எனது நண்பர் அசினுடன் ஓர் நேர்காணலில் தமிழ் சினிமாவை உருவாக்குவது இலகுவானது..... ஆனால் தமிழ் சினிமாவின் மீது கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிறுவன நிலைபாடு தான் நல்ல சினிமாவையோ, சாதாரண சினிமாவையோ உருவாக்க கால தாமதத்தை தருகின்றது. அத்தோடு ஒரு Manager Ak;> ManagementIம் தெரிந்து கொள்ளத்தான் பல வருடங்கள் கடந்து விடுகின்றது என்கிற உண்மை சத்தியமானது என்பதை விட அது தான் உண்மையும் கூட. தமிழ் சினிமாவில் இயங்குவதற்கு ஒவ்வொருவருக்கும், பாரத்தை தருவதும் இந்த மனோபாவம் தான். அதனால்தான் இந்த மனிதர்கள் போலவே அவர்களின் சினிமாவும் பாவத்தை உருவாக்கும் ஊற்றாக இருக்கின்றது. தமிழ் சினிமா பெரும் பாவ சாபத்தை சாதாரண மனிதனின் வாழ்வில் வைத்து சென்று விடுவதோடு சாத்தானின் ஆயுதமாகவும் உள்ளதை நாம் எப்போதும் அறிவோம். பாவத்தை தேடும் பாவிகளாக மாற்றும் இயக்குனர்களுக்கும்;, தயாரிப்பாளர்களுக்கும் தாம் செய்வது பாவம் என்பதை எப்போது தான் அறிவார்களோ.

தமிழ் நாட்டிலிருந்த அந்த காலங்களில் தமிழ் சினிமாவில் ஒரு உதவியாளனாக இயங்கினாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஏதோ ஒரு தவறை செய்வதாக எனக்குள் ஏதோவொன்று பேசினாலும், பயணம் தொடர்ந்தது. சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் சென்று வேலை செய்தாலும் மனதில் சந்தோஷம் என்பதோ, சமாதானம் என்பதோ கொஞ்சமும் இல்லாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆசையோடும், இலட்சியத்தோடும், சினிமாவை விருப்பதோடும் ஏற்றுக்கொண்டாலும் மனதில் அமைதி இழந்தவனாக, பைத்தியக்காரனாக, பரதேசியாக ஏமாற்றப்பட்டவனாக உதாசீனப்படுத்தப்பட்;ட ஒரு பாண் துண்டாக, ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாதவனாக எல்லா இடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட மனதுடன் ஆத்மாவை தொலைத்து நிம்மதி இழந்தவனாக அலைந்த நாட்கள் அதிகம். வேலையேதும் செய்ய முடியாத படிக்கு என் சோம்பலும், அதீதமான கருத்துக்களும் மாயை தந்து திருப்தி படுத்த பார்த்தது. கோயில், அத்வைதம், ஞானமடைதல், ஓஷோ, மெய்யுணர்வு, யோகாசனம், தியானம் என்று பல்வேறு வழிகளிலும் புத்தியை செலுத்தினாலும் அமைதிக்கான இடம் எங்குமே புலப்படவில்லை. விரக்தி, வேதனை, தனிமை, அன்புக்காக ஏங்கும் மனத்தோடு சொல்ல முடியாத துயரத்தோடு அலைந்தேன். வேதாகமத்தில் பிரசங்கியின் வார்த்தைகள் பேசுவது போல்

ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும்
மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்
மனதை பிரயோகம் பண்ணினேன். இதுவும்
மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது என்று கண்டேன்.
(பிரசங்கி : 1-17)

மனதை திருப்திபடுத்தும் முயற்சியில் அலைந்த அலைச்சலில் உடலும் மனதும் தன் நிலையை இழந்து, வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் விரக்தியும், வெறுப்புணர்வும், தோல்வி மனோபாவமும் என்னை தற்கொலையை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது தான் மீண்டும் நான் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. மீண்டும் 8 வருட காலத்திற்கு பின்பு வீட்டிற்கு திரும்பினேன். வீடு கொஞ்சம் மன பாரத்தையும், வலியையும் தீர்த்தாலும். மறுபடியும் ஏதோ ஒரு துயரம் வருமோ என்பதற்கான நிலையுடன் திருமணம் இன்னுமொரு துயரத்தை தரும் என்பது தெரியாமலேயே அதனுள் விழுந்தேன். பசி, பட்டினி, என்ற வேதனையோடு அலைந்த நாட்களில் ஏதோவொரு தைரியம் இருந்தது. ஆனால் திருமணம் மனதின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் சுக்குநூறாக உடைத்தெரிந்தது. எல்லாம் தகர்ந்து நிர்க்கதியான நிலையில் 'வெறுமை' சூனியம் சூழ நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் முன் வந்து நினறேன்.

'பதவி ஆசைக்காக உழைத்தவர் உச்சம் கண்டதில்லை!
பணத்திற்காக உழைத்தவர் வரவும் கண்டதில்லை!
மனிதனுக்காக உழைத்தவர் மகிழ்ச்சி கண்டதில்லை!
ஸ்தாபனங்களுக்காக உழைத்தவர் சமாதானம் பெற்றதில்லை!
கொள்கைக்காக உழைத்தவர் பலன் கண்டதில்லை!
இம்மையில் நன்மை தேடி உழைத்தவர் பரிசுகள் பார்த்ததில்லை!
கிறிஸ்துவின் நாமத்திற்காக உழைத்தவர் பயம் அறிந்ததில்லை!
நி;த்திய பாக்கியத்திற்காக உழைத்தவர் வெட்கம் அடைந்ததில்லை!
(நன்றி: விஷ்வவாணி சஞ்சிகை)

வாழ்க்கையை தொடர்ந்தும் நரகமாக்கிக்கொண்டதன் முடிவாகத்தான் திருமண உறவு அமைந்தது. உணர்வுகளையெல்லாம் அது தாக்கி தன்மையை நோக்கி என்னை அழைத்து சென்ற போது இயேசுவின் அன்பு மாத்திரம் தான் என்னுள் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உறுதுணையாக கிடைத்த இறுதி சரணாகதி. கிட்டத்தட்ட இயேசுவோடு என் உறவு பல வருடங்களாக தொடர்ந்து வந்திருந்த உணர்வை ஆண்டவர் என்னை தொட்ட போது உணர்த்தினார். இதுவரை கண்டிராத சமாதானம் உலகின் பெயரால் ஏற்படவில்லை. தேவனின் பெயரால் ஏற்பட்;டது. தேடி வந்து அன்பு செய்த தேவன் எனக்குள் இரட்சிப்பை தந்தார்.

இதனால் நான் சந்தித்திராத பெரிய பலத்த சந்தோஷம், நிம்மதி, சமாதானம் எனக்குள் பற்றிப் படர்வதையும் என் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாக மாறுவதையும் என் இருதயம் சந்தோஷத்தின் வாசலில் நின்றும் என் தகப்பனின் என்றும் மாறாத அன்பின் தழும்பில் மூடிக்கொள்வதையும், இரட்சிப்பின் மகிமையையும் என்னால் எப்படி வார்த்தைகளில் சொல்லி விட முடியும். இயேசுவின் பரிசுத்த அன்புக்கு முன்பு மனித வார்த்தைகளும், மொழிகளும், அருகதையற்று போவதை நான் பல்வேறு தருணங்களில் அடைக்கப்பட்ட ஸ்தம்பிதமான மனோநிலையுடனும், கண்ணீர் பெருக்கெடுக்கும் அந்த தேவ அன்புக்கு முன்பு என் எல்லா நியாயங்களும் தேவனிடம் சரணாகதி அடைகின்றது.

' உனக்குண்டான எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுங்கையனாக என்னிடம் வா. நான் எனது விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த அந்த இரட்சிப்பை உனக்கு இலவசமாக தருகிறேன்!' என்ற இயேசுவின் வார்;த்தைகள் சத்தியத்தின் ஒளி. இருளின் குழந்தைகளாக வாழும் பாவிகளின் மீட்பர் இயேசு.

தொடரும்......