...........................................................................
மழை நீர் வழிந்தோடும்
தெருவில் முனையில்
அவளின் முகம்
போகும்திசையறிந்து
மெதுவாக நடக்கிறேன்…
குடை பிடிக்காத
மழை நாளில்தான்
மழை மேல் இருக்கும்வர்ணம் பற்றிய
வாசனை என்னில் எழுகின்றது…
மற்றொரு பிரலயம் பெருகும்
நகரச் சாலையில்
ஒரு வழிபோக்கனின் பாடலைபோல்
அவரவருக்கானகாயங்களுடன்
தினமும் தரும் அலுவலக நியாயங்கள்…!
முறக்க முடியாதவள் பற்றிய
சோக பாடலின்
வரிகளில்கொஞ்சம் நேரம்
இடை தங்கி போகும்
வர்ண ஜால மனத்தை
எப்போதும் மாற்றிவிட
முடியாத படி
இசை தெருக்களில்
எனது உள்ளோடும்
நினைவை
இசைக்கின்றது
புரியாத பாடலின் தாளலயம்..!
மழையின் ருசியை
பருகி பருகி தினமும் குடைகளை
விட்டொழித்து
துள்ளிய பள்ளிக் காலங்கள்
மட்டும் ஆன்மாவின்
பாடலாக மழையை
மனதில் கரைக்கிறது…
நீரின்புனிதம் எல்லா வற்றையும்
விட பெரியது !
நீர் பெரியது
நீர் அன்புள்ளது
நீர் அருமையானது
நீர் இன்றி
அமையாது வாழ்வு..!
•
No comments:
Post a Comment