
இசை ஜாலங்களை
விற்பனை செய்யும்
அந்தப்புரம்
ஒன்றில்
உனது
புல்லாங்குழல்
புதைந்து போன
தினத்தில்தான்
நீ தந்துவிட்டு
போன
கண்ணிர் பற்றிய
ஞாபகங்களை
வாசித்தேன்….!
என் மௌன
நதியில்
நீதான் கற்களை
வீசி எறிந்து
என் காணாமல்
போன காதலை
மறுபடியும் மலரச்
செய்தாய்….
பொய்யுடன்
புனையும்
உனது வார்த்தை
ஜாலங்களில் நியாயமான
கோபங்களின் தனித்திருக்கும்
நேரத்தில் மனசாட்சிகளிடம்
கேட்டு பார்!
நான் அன்பளித்த
விநாயகர் சிலையில்
மறு வடிவமாக
ஒரு காதலின்
தீராத மழையைபற்றிய
உரையாடலின் போது
நீ
மூடிக்கொள்ளும்
ரோஜா பூக்களை
எங்கேசென்று
நட்டு வைக்க போகிறாய்?
தேடாத காதலின்
ஸ்பரிசங்கள்
பற்றிய நினைவு
தகிப்பில்எரியும
உனது ஞாபகங்கள்....
No comments:
Post a Comment