
சிறகுகளுடன்
பறக்க நினைக்கிறேன்…
கலை மனதின்
மன பாடலுடன்
ஒரு பறவையின்
வாசகனாக வாழ விருப்பம்….
ஆந்திமாலையில்
கடற்கறையில் ,
இசைபாடும் குயிலின்
வசீகரம்தீராத
இசையில் சிம்பொனி
குரலில்...
நண்பனின் துன்பம்
போக்கும் வார்த்தைகளுக்கு
மட்டும் ஏனோ
,இன்னும் கொங்சம் வாழ்ந்து
விடவும் அவா
எழுகின்றது…..
ஒவ்வொரு
புல்வெளியும்
சில பனிதுளிகளுடன்தான்
வாழ்கின்றது….
மனிதனுக்கு மட்டும் ஏன்
இந்த துயரம்
கடவுளே கடவுளே
என்னை ஒரு கலைஞனாக
வாழ வழி விடு….
சிறகுகளின்
வலிகளுடன்
வனாந்தரம் மறந்து
புது தேசம் தேடும் பறவைக்கும்
இருக்கும் துக்கம்…
எழுந்து நடமாட
வேண்டும்
இந்த தெருவெங்கும்
அந்த வங்சகமற்ற
குழந்தையின் குரலாக
ஓலி பரப்பும் குரலில்
தீராத சந்தோசம்
மட்டும் தொலைபேசி
மணியை போலதீராத
காதலின்சங்கீதமாக
அறையெங்கும்
சினுங்குகிறது….…
30.05.2008
No comments:
Post a Comment