
நூறு வருடங்களை
கடந்த ஒரு
பழைமையான
மலையடிவாரம்
யாருமற்ற
அத்துவான வெளியில்
பறவைகளின் குரல்
மட்டும்
தேயிலை மலையெங்கும்
விட்டு விட்டு ஒலித்தபடி
,
இருந்தது…
கொழுந்து மடுவத்தில்
சராசரியாக வரும்
சம்பாசனையில்
அவன் அவனுடைய
முகவரிகளை
என்னிடம் தந்து,
இவைகளை தேடி போகும்
நாளில் நீங்களும்
உங்களின் பரண்களின்
சாளரங்களில்
பூங்காவனத்தை பற்றிய
சாலையின்
சாமானிய மனித பாடலோடு
பாம்பாட்டியின்
சித்து வேலையோடு
அவனும் அவளும்
யாருமற்ற
மலையடிவார
நிழல் சிரிப்பது
மட்டும் ஏகாந்தத்தை
பரப்பி சாளரமாக வீசியது…
அருவியின் இசை
பிரளயம்
என்னுடைய
புல்லாங்குழலில்
பாடலை தேடி வாசித்து
சாளரங்களின் கதையை
முழுவதுமாக
சொல்லி சென்றது…!
நேற்றிருந்த வரிகளில்
ஜீவன் மட்டும் உனது
வார்த்தைகளில்
ஏனோ ஓலிக்கவில்லை….