புலப்படுவதற்கான
எல்லா இருளின்
திரைவெளிகளும்
சுயங்களை நொறுக்கும்
வீர சாகச நாயகர்களின்
பெரும்
கதைப்பாடுகளுக்கு
முன் -
நான் என்
திரைகளின் மொளனத்தின்
சுயவழி
முனைப்பை
தேடி வெற்றுவெளிகளில்
அகதியைப் போல
அலைகின்றேன்…!
அடைப்பட்டுக் கிடக்கும்
திறக்க முடியாத
சாகாச பிம்பங்களின்
பொய்களின் கதை
அறைகளில் உள் எரியும்
வாசல்களில்
காத்துக்
கிடக்கின்றேன்…
~அந்த்ரேய் தாரக்கோவ்ஸ்கியின்
கண்ணாடி2களுடன்
ஒரே
ஒரு தமிழ்
சினிமா கலைஞன் ஈரம் சொரியும்
ஈழ மரபுகளிலிருந்து
தோன்றிட
மாட்டானா…?
இருளின் புனைவெளி பிம்பத்தை
உடைத்தெழும் முனைப்புடன்
ஜோன் ஆபிரகாமின்3 ஆவி
என்னையும் பிடிக்க வேண்டும்…!
நம்
சிதிலமான இருப்பின்
வறண்ட குகைகளில்
அலையும் தமிழ் மன
பிம்பங்கள்
செத்துச் செத்து
ஒழுகி மறையும்
புனிதங்கள் நிறைந்த
திரை நாளின்
முன்
நாம்
மறுபடியம்
உயிர்த்தெழுவோம்!
Friday, October 3, 2008
பொய்களின் கதை அறைகளில்…
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//சினிமா கலைஞன் ஈரம் சொரியும்
ஈழ மரபுகளிலிருந்து
தோன்றிட
மாட்டானா…?//
தோன்றுவான்....அது நீங்களாக இருக்கட்டும்....வாழ்த்துக்கள்...
Post a Comment