Sunday, October 12, 2008

வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்


என் காலடித்தடங்கள்
தொலைந்து போயிருந்த
ஓர் நாளில்
உன்னை சந்திக்க
நேர்ந்தது....

வாழ்வு
யாருடைய சுதந்திரத்தையும்
அனுமதிககாமல்
நம்மை அழித்துக்
கொண்டிருக்கின்றது...!

உனனைப்பற்றி
சொல்லபடும்
புனைவுகளில்
எலலாம்
நம்மைப் பற்றிய
காதலை
ஊரில்
சீன வெடியாய்
கொழுத்தி
போட்டு
வேடிக்கை பார்க்கின்றது!
ஆனால்
நீ எத்தனை து}றம்
கலங்கி
போய் விட்டாய்
நம் காதல்
உன்
தன் வழி பயணத்தடைகளை
அழித்து
வட்டதை
மட்டும் தான்
தந்திருக்கின்றது...

நீ
எத்தனை
அற்புதமானவன்
கலீல் ஜிப்ரானின்
கவிதைகளைப் போல்
நீ எவ்வளவு
அழகானவள்..

அன்னை
தெரேசாவைப் போல்
நீ எவ்வளவு அன்டானவள்
நான்
தான்
பாப்லோ நெருடன்
கூறியது போல்
என் காதல் ஒரு
குழந்தையின்
கதறலை
தவிற
வேறொன்றும்
இல்லை...

நமக்க
புரிகின்ற
இந்த எளிமையான
வாழ்வுககு
முன்
நம்மை சுற்றியுள்ள
உலகத்திற்கு
சாதியும்
சடங்குகளும்
வர்க்கங்களும்
பெரிதாக
கெரிவதில்
ஏதேனும் அர்த்தங்கள்
இருக்கின்றனவா..?

சொல்லபடும்
மூன்றாவது காரணங்களுக்கு
முன்
நீயும் நானும்
வாழ்வில் நெடும்
து}றத்தின்
சரிவுகளில்
யாருக்கும்
தெரியாமல்
போனபடி
இருக்கின்றோம்...

இருவர்
சேர்ந்து வாழ
இருள்
வெளிகளில்
பரவும் கணணுக்கு தெரியாத
காரணங்களுக்கு முன்
வாழ்வின்; ருசி
அத்தனையும்
செத்து போகின்றதை
பாரத்தபடி
வாழ்வதென்பது
சகிக்க
முடியவில்லை பெண்ணே!

இயலாமை கசியும்
என்
இருப்பில் தொடரும்
வன்முறையின் கூர் மரணத்தின்; முன்
இன்றும்
முடிக்கமுடியாத படி
மீதமான வாழ்வு
என்னை பார்த்து சிரிக்க படி
இருக்கின்றது...

கடக்க நினைக்கிற
துயரங்களுக்கும்
எழுதி
செலலவும்
திரை
சுருளின்
வாழ்வின்
புனைவை பதிவு பண்ணவும்
என்கிற
ஒற்றை
காரணங்களுடனும்
மற்றும்
நம்முன் இருக்கும்
இயலாமையை
அழித்து
எப்படியாவது
எழுந்து நடக்க நினைக்கும்
ஒரே காரணத்திற்காக தான்
எழுதிக் கொண்டு...
வாழ்ந்துக் கொண்டு...
சினிமாவை நம்பி நானும்
நானை நம்பி சினிமாவும்
தற்கnhலை செய்யாது
இக்கணம் வரை வாழ்தல்
உறுதிப்படுகின்றது...
மற்றவைகள் எல்லாம்
பின்
தான்......

3 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//இருவர்
சேர்ந்து வாழ
இருள்
வெளிகளில்
பரவும் கணணுக்கு தெரியாத
காரணங்களுக்கு முன்
வாழ்வின்; ருசி
அத்தனையும்
செத்து போகின்றதை
பாரத்தபடி
வாழ்வதென்பது
சகிக்க
முடியவில்லை பெண்ணே!//

இந்த வரிகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன.

உங்கள் புதிய தளத்துக்கு வாழ்த்துகள் சகோதரரே.
காலச்சுவடுகளைத்தாண்டி சாதனைகள் படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தமாக்குவோம்.

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

மயூ மனோ (Mayoo Mano) said...

ஒரு கவிதை - உங்கள் வாழ்க்கை.....
அருமையாக இருக்கிறது....