Sunday, October 12, 2008

வலிகளை நினைவுபடுத்தும் உன் முகம்


என் காலடித்தடங்கள்
தொலைந்து போயிருந்த
ஓர் நாளில்
உன்னை சந்திக்க
நேர்ந்தது....

வாழ்வு
யாருடைய சுதந்திரத்தையும்
அனுமதிககாமல்
நம்மை அழித்துக்
கொண்டிருக்கின்றது...!

உனனைப்பற்றி
சொல்லபடும்
புனைவுகளில்
எலலாம்
நம்மைப் பற்றிய
காதலை
ஊரில்
சீன வெடியாய்
கொழுத்தி
போட்டு
வேடிக்கை பார்க்கின்றது!
ஆனால்
நீ எத்தனை து}றம்
கலங்கி
போய் விட்டாய்
நம் காதல்
உன்
தன் வழி பயணத்தடைகளை
அழித்து
வட்டதை
மட்டும் தான்
தந்திருக்கின்றது...

நீ
எத்தனை
அற்புதமானவன்
கலீல் ஜிப்ரானின்
கவிதைகளைப் போல்
நீ எவ்வளவு
அழகானவள்..

அன்னை
தெரேசாவைப் போல்
நீ எவ்வளவு அன்டானவள்
நான்
தான்
பாப்லோ நெருடன்
கூறியது போல்
என் காதல் ஒரு
குழந்தையின்
கதறலை
தவிற
வேறொன்றும்
இல்லை...

நமக்க
புரிகின்ற
இந்த எளிமையான
வாழ்வுககு
முன்
நம்மை சுற்றியுள்ள
உலகத்திற்கு
சாதியும்
சடங்குகளும்
வர்க்கங்களும்
பெரிதாக
கெரிவதில்
ஏதேனும் அர்த்தங்கள்
இருக்கின்றனவா..?

சொல்லபடும்
மூன்றாவது காரணங்களுக்கு
முன்
நீயும் நானும்
வாழ்வில் நெடும்
து}றத்தின்
சரிவுகளில்
யாருக்கும்
தெரியாமல்
போனபடி
இருக்கின்றோம்...

இருவர்
சேர்ந்து வாழ
இருள்
வெளிகளில்
பரவும் கணணுக்கு தெரியாத
காரணங்களுக்கு முன்
வாழ்வின்; ருசி
அத்தனையும்
செத்து போகின்றதை
பாரத்தபடி
வாழ்வதென்பது
சகிக்க
முடியவில்லை பெண்ணே!

இயலாமை கசியும்
என்
இருப்பில் தொடரும்
வன்முறையின் கூர் மரணத்தின்; முன்
இன்றும்
முடிக்கமுடியாத படி
மீதமான வாழ்வு
என்னை பார்த்து சிரிக்க படி
இருக்கின்றது...

கடக்க நினைக்கிற
துயரங்களுக்கும்
எழுதி
செலலவும்
திரை
சுருளின்
வாழ்வின்
புனைவை பதிவு பண்ணவும்
என்கிற
ஒற்றை
காரணங்களுடனும்
மற்றும்
நம்முன் இருக்கும்
இயலாமையை
அழித்து
எப்படியாவது
எழுந்து நடக்க நினைக்கும்
ஒரே காரணத்திற்காக தான்
எழுதிக் கொண்டு...
வாழ்ந்துக் கொண்டு...
சினிமாவை நம்பி நானும்
நானை நம்பி சினிமாவும்
தற்கnhலை செய்யாது
இக்கணம் வரை வாழ்தல்
உறுதிப்படுகின்றது...
மற்றவைகள் எல்லாம்
பின்
தான்......

Friday, October 3, 2008

நீர் தேக்கங்களின் நினைவுகள்….







என் பிறந்த வீடு
அங்கிருந்து
ஆகற்றப்பட்டு விட்டது!

புலம் பெயர்ந்த
மனிதர்களுக்கு
வாழ்வளிக்காத நிலத்தை
நீர் தேக்கம் என்ன
நிரப்பி
விடுமா என்ன!

நேற்று
ஓடி விளையாடிய
கால்களின் வாசனையை
இனி
நாம் எங்ஙனம்
தேடுவது…..


அம்மாவின்
நினைவிலிருந்து
தேயிலை மலை முகடுகள்
மட்டுமல்ல
அப்பாவோடு வாழ்ந்த
வீடும் நிலமும்
தண்ணீரில் மூழ்கி
விட்டது…!

காற்றின் மணம்வீசும் புல்வெளிகளில்
புல் அறுத்த
அறுவாளின் பச்சையாக
சிக்கியிருக்கும் புல்லின்
இரத்தத்தை போல்
மாடு அசை போடும்
ஆதி நினைவில் மூழ்கி
மின்சாரம்
வராத
எனது லய காம்ராவில்
ஜப்பானியனின் கனவுக்கு
மட்டும்
உறுதி
தெரியும் நமது
வாழ்வில் இனியும்
ஒரு வீட்டில் வாழ்ந்த
காலத்தின் மழை
துளி
வடிந்தோடும்
நினைவில் இறுதி பாடலில்
வரிகளில் பாட்டியின்
மரணம்….

மூதாதையர்களின் எலும்பும்
மச்சையும் மீதமாக
காதலிக்கும் இனி
சென்று வருவதற்கு
வீடும் சொந்த ஊரும்
இல்லாமல்
மலைகளில் புலம்பெயர்ந்து
மலைகளின் முன்பு ஒரு
மலை வாசியாக
வாழ்தல்
மட்டும்
தகிக்கின்றது கருணைகள்
ஏதுமற்ற கடவுளின்
உள்ளார்ந்த
பொய்களினால்….

பொய்களின் கதை அறைகளில்…






புலப்படுவதற்கான
எல்லா இருளின்
திரைவெளிகளும்
சுயங்களை நொறுக்கும்
வீர சாகச நாயகர்களின்
பெரும்
கதைப்பாடுகளுக்கு
முன் -
நான் என்
திரைகளின் மொளனத்தின்
சுயவழி
முனைப்பை
தேடி வெற்றுவெளிகளில்
அகதியைப் போல
அலைகின்றேன்…!

அடைப்பட்டுக் கிடக்கும்
திறக்க முடியாத
சாகாச பிம்பங்களின்
பொய்களின் கதை
அறைகளில் உள் எரியும்
வாசல்களில்
காத்துக்
கிடக்கின்றேன்…
~அந்த்ரேய் தாரக்கோவ்ஸ்கியின்
கண்ணாடி2களுடன்
ஒரே
ஒரு தமிழ்
சினிமா கலைஞன் ஈரம் சொரியும்
ஈழ மரபுகளிலிருந்து
தோன்றிட
மாட்டானா…?

இருளின் புனைவெளி பிம்பத்தை
உடைத்தெழும் முனைப்புடன்
ஜோன் ஆபிரகாமின்3 ஆவி
என்னையும் பிடிக்க வேண்டும்…!

நம்
சிதிலமான இருப்பின்
வறண்ட குகைகளில்
அலையும் தமிழ் மன
பிம்பங்கள்
செத்துச் செத்து
ஒழுகி மறையும்
புனிதங்கள் நிறைந்த
திரை நாளின்
முன்
நாம்
மறுபடியம்
உயிர்த்தெழுவோம்!

மரணத்தை நோக்கி செல்லும் வேர்கள்





ஆற்றின் பள்ளத்தாக்குகளின்
அழைக்கும் மரணங்களுக்கு
முன் நிகழும்
ஒட்டுமொத்தமானதொரு
இருள் நாளில்
நானின் புதிர்வெளிகள்
தன்னிலையை இழந்து
நகரங்களின் வன்முறை தரும்
முகசாகரங்களுக்கு
முன் தள்ளும் பொழுதுகள்

இருள்
சூழ்கின்றது – நம்
வாழ்வாதாரங்களில்….

ஒன்னிறிலிருந்து
வேறொன்றின் முன்
நிர்பந்தங்களின் மன இறுக்கத்தின்
காற்றின் மொழிகள்
தடமற்று தன்போக்கில்
பிடிப்பற்று மரணத்தை நோக்கி
செல்லும் வேர்கள்….

மளிகை சாமன்களின்
மத்தியில் நான் கலமாகி
போனதொரு பாதையில்
அழுகையுடன் முற்றுப்பெறாத
ஆதாரங்களின் முடிவுடன்
தொடர்கின்றது…
சிலுவை சுமக்கும்
வாழ்வின் பொய்கள்……!

அறைகளில் நிரம்பி போயிருந்த
காற்றின் புழுதியில் என்
ஒட்டகங்களின் முதுகில்
பொதிகளுடன்
கால் சுடும் மணற்
பரப்பில் யாருமற்ற
அனல் காற்று வீசும்
தனிமையில் புதைகின்றது
உன் நிறைவுகளுடன்….

உணர்வுகளின்
உயிரை கசக்கி
பிழியும் நிர்கதியற்ற
வாழ்வின்
ஆதாரங்கின் முன் மரிக்கும்
நளைய கனவுகளின் ஜீவன்கள்…..

என் அறைகளில்
தேங்கியிருக்கும் உன்
முகங்களின் சிரிப்பும்
சப்தங்கள் - நம்
எல்லா விதமான
தடங்களையும் கேலி
செய்து சரித்தபடி…

மல்லிகை மாத இதழ் அக்டோபர் 2005


நான் என்ற நான்







ஒவ்வொரு முறையும்
தவற விடுகின்ற
புள்ளியிலிருந்து என்
வாழ்வின் முரண்கள்
வளர்கின்றன…!

வீட்டின்
இருள் மையத்தில்
ஒற்றைப் பனையுடனான
உரையாடல்கள்…
காற்றின் மழைத்துளிகள்
போல் நனைகின்றன…
தனிமையுற்றிருக்கின்றன
என் எல்லாக்கனவுகளும்…!

மற்றும் சில
செய்திகளுடன்
நான் என்னைத்தேடி
அலைகின்றேன்…!
இங்கிருந்தாவது
எங்காவது என்
“நான்” பற்றிய
விளக்கங்கள்
சிலந்தி வலையுடனான
சிதிலத்தில் அகப்பட்டிருக்கலாம்!
ஆக,
நான்
இத்தோடு
இன்றும்…

நன்றி:தெரிதல்

விழித்தடங்களில்





நீண்ட புதைகுழியின்
மரணங்கள்
பற்றிய
குறிப்புகளை தயார் செய்தபடி
கழியும் வாழ்நாட்கள்

கனிப்
பொறிகள்
அறைகளின்
வெட்கை கனலின்
பேச்சு துணையற்ற
முடியும்
கவிதையின் மொழி
குழந்தைகள்
வருகிறார்கள்
போகிறார்கள்
குழந்தைகளை
அதன்
அர்த்தங்களோடு புரிந்து
கொள்ள முடியாமல்
தவிக்கும் மனசு

ஓவியங்களின் நிழல்
பிம்பங்களின் கானல்
பொழுதில்
வெளியே
அடிக்கும்
வெய்யிலின் தணல்!

இருப்புக்களின்
மீதெழும்
அவநம்பிக்கையுடன்
மிகுதி வாழ்வை
நம்பிக்கையற்று
வரண்ட வழித்தடங்களில்
நான்

30.06.2005

பகிரப்படாத கவிதைகள்







எழுதமுடியாத
கவிதைகளாக நம்
காதலின் மிகுதிகள் மட்டும்
நம்மில்
மிஞ்சி போனது

நீ
எழுதிய
போல், எப்போதும் எம்மில்
பகிரப்பட்ட எச்சங்களாய்
நம் கவிதைகள் மடடும்
என்றாய்
நிஜம்தான் பெண்ணே

விலகிச் சென்று
வெகு நாட்களான
பின்பும்
திருமணம் கூடி
வேறொருத்தியோடு வாழ்வை
பகிர முடியாது
திசை
தடுமாறிய
அந்நியனாகி போன
மிகுதி வாழ்வில்
நீ மட்டும்
மறக்க முடியாத
ரணங்களின் இசையை
என்னுள் எழுப்புகிறாய்

முதல் காதலையும்
முதல்
முத்தத்தையும்
எங்கே சென்று நான் தொலைப்பது…
போதும் இந்த வாழ்வு
என்றாலும்
சாவதற்கும் தையரிமற்று
மீளாத உனது ஞாபகங்களை
சதா காலமும்
சுமக்கும்
இந்த தணியனி;ன்
மிகுதி வாழ்வு மட்டும்
என்ன ஆற்று வெளிகளின்
கவிதைகளை தரவா போகின்றது.

யார் மேலும்
எந்த புகாரும் இப்போதும்
இல்லை!
நொறுங்கிய கனவுகள்
உன்னை விட்டு பிரிந்த
நாளில் எனக்கு
தெரியவில்லை
இப்போதுதான் நீ
என்னை விட்டு பிரிந்தது போல்
அறிகிறேன்…



எப்போதாவது
உன்னுடன் கைகோர்த்து
ஒரே ஒரு நொடி நேரம்
அந்த ப10ங்காவில்
நினைத்து நினைத்து பார்த்தேன்
பாடலை பாடி
இறந்து
விடவும்
இனியும் பிரியாமல் இருக்கவும்
எங்கேனும் ஒரு
சந்தர்ப்பம்
தோன்றாதா என்றே
மனம் விசுவாசப்படுத்துகின்றது
அக்னி
ஆனாலும் அக்னி
உன் கவிதைகளை
படிக்கும் போது
நெருப்பு கள்ளிகளாய்
என் இதயம்
எரிந்து கொண்டுதான்
இருக்கின்றது…


எப்போதாவது
உன்னுடன்
கைகோர்த்து
ஒரே ஒரு நொடி நேரம்
அந்த ப10ங்காவில்
நினைத்து நினைத்து
பார்த்தேன்
பாடலை பாடி
இறந்து விடவும்
இனியும் பிரியாமல் இருக்கவும்
எங்கேனும் ஒரு
சந்தர்ப்பம் தோன்றாதா என்றே
மனம்
விசுவாசப்படுத்துகின்றது
அக்னி
ஆனாலும் அக்னி
உன் கவிதைகளை
படிக்கும் போது
நெருப்பு கள்ளிகளாய்
என் இதயம் எரிந்து கொண்டுதான்
இருக்கின்றது…