Wednesday, April 27, 2011

நீ எழுதும் கவிதை.....



ஞாபகத்தின் கோடுகள் உன்
பால் மனம் மாறாத கருணையை
என் தாகம் கொண்ட ஏகாந்த மனதில்
மழையின் சாரலை துாவுகின்றது
என் ப்ரியத்துக்குரிய ப்ரியமே....

சற்றெ வந்தாய் சலனத்தின்
ரேகைகளை அத்தனை அழுத்தமாக
உன்னால எப்படி பெண்னே பதிக்க
முடிகின்றது....

இருவரும் ஓரே நேர் கோட்டில்
சந்தித்த காலத்தின் தீராத புதிரை
இனி என் இரவுகள்
நதியின் பள்ளத்தாக்கில்
விழுந்த படகைப் போல
நீ
மனதின் பாடலை ஏன்
சந்தியா ராகத்தில்
புனைந்தாய்.....?

மறுமுறையும் மறுமணம்
சாத்தியத்தின் வாசல்
உன்னால் உத்தரவு பெற்றால்
நான் சாகாது உன்னில்
இறுதி வரையும் வருவேன்
உன் கைப்பிடித்து -------------
நம் வானத்தின் ஓர் அழகிய
பட்டமாவான்.....
நீ
புதிர்களை என்னிடம்
முழுவதுமாக அவிழ்கும் போது
இரவுகளின் சாரளம்
நம் இருவரின் துயர கவிதையை
வானத்தின் நீளம் போல்..
என் சலனமுள்ள தனிமை காலம்
இனி உன் தோழின் ஸ்பரிசத்தில்
சாய்ந்து..சாய்ந்து....
நாம் ஆகாயத்தின் நீளமெங்கும் பதிக்கும்
உயிரை உன் பளிங்கு இதயத்துடன்
முத்தமிட்டு பதிக்க என் அகதி மனம்
ஆசையுடன் துடிக்கின்றது பெண்னே....

நீ
இனி என்ன பேசுவாயோ....
அது என்னை குறித்து
பேசுவாயா...இல்லை
இனியும் நான் தனித்து வாழும்
தீவுகளின் பேய்களுடன்
திருமணமா....
புரியவில்லை இன்னும்
நீ வானில் சலனமில்லா
நிலவாக வருகின்றாய்...
கவிதைகளினால் என் .இரவுகளில்
உன் தாதி முகம் என்
நோயை குணப்படுத்துகின்றது செல்லமே....

டியர் என்ற உன்
வார்த்தைகள் என்னில் ஓர்
அனலாக எரிக்கினறதுஎன்பதை நீ
அறிவாயா அனபே.....?
..................................................................
இரவு: 11.59 / 25/04/2011