ஒரு சாட்சி
மாரி மகேந்திரன்
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும்இ தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?
மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?
மாற்கு 8:36இ37 (ஆயசம 8:36இ37)
சினிமா என்ற ஓர் வஸ்து எனக்குள் எப்படி வேர்கொண்டது என்பதைப் பற்றி நான் அடிக்கடி சிந்திப்பதுண்டு. என்னை சினிமாவுக்குள் இழுத்து சென்றது எது? ஏன் சினிமாவை, கலையை வாழ்வாக ஆக்கிக்கொள்ள துணிவு ஏற்பட்டது. சினிமாவை வாழ்வாக ஆக்கிக் கொண்டதனால் இழந்தவைகள் அனேகம் ஆனாலும்.
சுpனிமா என்கிற வசீகரிக்கும் ஆயுதம் என் இருதயத்தை பிடித்து இழுத்து சென்றது ஏன்? எது?. எல்லோரிடமும் ஒரு பெலவீனம் உண்டு. அது போல் என்னிடத்திலும் சினிமா ஒரு பெலவீனமாகத்தான் குடிகொண்டுள்ளது. சினிமாவில் நான் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி சாதிக்கவில்லை. (அது கூட நல்லதற்குத்தான் என்பது வேறு விடயம்) ஆனால் இந்த சினிமாவின் மீது எனக்குள்ள ஆசை வர காரணமாக இருந்தவர் யார்? இந்த கேள்விக்கான பதிலை நான் கண்டடைய சுமார் ஒரு 20 வருடத்தையும் தாண்டி செலவளித்து விட்டேன். இதற்கான பதிலை நான் கண்ட போதுதான். எனக்குள் ஒரு ஒளி உட்புகுந்து என்னை பெலப்படுத்தியது. அந்த பதில் இதுதான்.
நசரேத்தூர் இயேசு ((JESUS OF NAZARETH) ) இந்த திரைப்படம் தான் என் வாழ்க்கையை திரைப்படத்துறை நோக்கி அழைத்து சென்றது. திரைப்படத்தை கண்ணும் கருத்துமாக நேசிக்க வைத்தது. இப்படம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப் படத்தை ஃவிறாங்கோ ஸெவிஹெல்வி என்ற இயக்குநர் உருவாக்கியிருந்தார். இதில் இயேசு நாதராக ஹொபேட் போவேல் நடித்திருந்தார். 397 நிமிடங்கள் கொண்ட இத்திரைக் காவியம் பார்ப்பவர்களின் இதய கிடங்கை வலுவாக தாக்க கூடியது. இத் திரைப்படம் இன்று வரை இரண்டாம், மூன்றாம், நான்காம் பாகம் வரை வெளிவந்துவிட்டது. ஆனால் நான் எனது பள்ளிக்காலத்தில் பார்த்த முதல் திரைக்காவியம் இப்படம் தான். இத்திரைப்படம் என்றும் என் வாழ் நாளில் மறக்கவே முடியாத படிக்கு மானசீகமானதொரு வலியை என் விபரம் புரியாத வயதில் ஏற்படுத்தியிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை. திரைப்படம் என்ற போது பொதுவாக மக்களின் மனதை தாக்க கூடியதுதான். ஆனால் 'திரைப்படம்' என்ற அளவில் இப்படம் என் மனதை தாக்கவில்லை. இயேசுவின் சிலுவைப்பாடுகள், அதைக் காட்சிப்படுத்தும் விதம், அவரின் சுவிஷேசம், யூதாசின் காட்டிக்கொடுப்பு என்று இன்றும் என் மன கண்ணிலிருந்து பிரிக்க முடியாத படிக்கு இப்படம் என்னுள் என் மனசாட்சிகளை விழிக்க வைக்கிறது. இயேசுவின் கல்வாரியின் இரத்தம் பாவிகளின் இருதயத்தையே ஒரு கணம் ஸ்தம்பிதம்படுத்தும். நான் இப்படத்தை பார்க்கும் போது ஆண்டு 2 அல்லது 3இல் தான் கல்வி கற்றிருப்பேன். இப்படத்தை யுழுபு சபையினால் தான் பாடசாலையில் திரையிட்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்து இருந்தது. படத்தை பார்த்துவிட்டு நான் வீட்டிற்கு சென்ற போது அம்மா ஏன் தம்பி இப்படி மழையில் நனைந்துகொண்டு வருகிறாய். என்று கேட்டுவிட்டு எங்கே குடை என்ற போதுதான் எனக்கு நான் மழையில் நனைந்தது தெரிய வந்தது. அந்த வயதில் நான் கொண்டு போயிருந்த அந்த கருப்பு குடை தொலைந்து போய்விட்டது. பசுமையும், இளமையும் மாறாத என் பால்ய வயதில் இளம் பிராயத்தில் தொலைக்க முடியாத இயேசுவின் அன்பு மழையை சுவைக்க தெரிந்திருந்ததே என்பதை நினைக்கும் போது, இன்றும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்திற்கு பின்பு தான் நான் சினிமாவின் மீது மோகம் கொண்டேன். இதன் தொடர்ச்சியாக நல்ல திரைப்படங்களை தேடிப்பார்க்க தொடங்கிய காலங்கள் இதுவரை சினிமாவுக்கான புள்ளியை எண்ணில் விதைத்தவர் இயேசுவே.
ஆனால் அதற்கு பின்பு நான் சினிமா மீது கொண்ட காதலினால் தமிழ் சினிமாவில் எப்படியாவது நுழைந்து ஒரு நடிகனாக வர நினைத்தேன். ஆனாலும் நடிகனாக அழகு வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் இயக்குனராக வரலாம் என்பதற்கான முயற்சியுடன் இந்தியாவிற்கு சென்று திரைப்படத் துறையில் முயற்சி செய்யலாம் என்பதற்கான உத்வேகத்துடன் தமிழ் நாட்டிற்கு 1996 ஆம் ஆண்டு பயணமானேன். நல்ல சினிமா மீது எனக்கிருந்த ஈடுபாடு அங்கு சென்ற பின்பு சிறிது சிறிதாக உடைய ஆரம்பித்தது. இந்த உடைவு என்பது வெறுமனே நோக்கத்தை மட்டுமல்ல வாழ்வின் மீதும் வெறுமையை சூழச் செய்தது. அண்மையில் எனது நண்பர் அசினுடன் ஓர் நேர்காணலில் தமிழ் சினிமாவை உருவாக்குவது இலகுவானது..... ஆனால் தமிழ் சினிமாவின் மீது கட்டி வைக்கப்பட்டிருக்கும் நிறுவன நிலைபாடு தான் நல்ல சினிமாவையோ, சாதாரண சினிமாவையோ உருவாக்க கால தாமதத்தை தருகின்றது. அத்தோடு ஒரு Manager Ak;> ManagementIம் தெரிந்து கொள்ளத்தான் பல வருடங்கள் கடந்து விடுகின்றது என்கிற உண்மை சத்தியமானது என்பதை விட அது தான் உண்மையும் கூட. தமிழ் சினிமாவில் இயங்குவதற்கு ஒவ்வொருவருக்கும், பாரத்தை தருவதும் இந்த மனோபாவம் தான். அதனால்தான் இந்த மனிதர்கள் போலவே அவர்களின் சினிமாவும் பாவத்தை உருவாக்கும் ஊற்றாக இருக்கின்றது. தமிழ் சினிமா பெரும் பாவ சாபத்தை சாதாரண மனிதனின் வாழ்வில் வைத்து சென்று விடுவதோடு சாத்தானின் ஆயுதமாகவும் உள்ளதை நாம் எப்போதும் அறிவோம். பாவத்தை தேடும் பாவிகளாக மாற்றும் இயக்குனர்களுக்கும்;, தயாரிப்பாளர்களுக்கும் தாம் செய்வது பாவம் என்பதை எப்போது தான் அறிவார்களோ.
தமிழ் நாட்டிலிருந்த அந்த காலங்களில் தமிழ் சினிமாவில் ஒரு உதவியாளனாக இயங்கினாலும், மனசாட்சிக்கு விரோதமாக ஏதோ ஒரு தவறை செய்வதாக எனக்குள் ஏதோவொன்று பேசினாலும், பயணம் தொடர்ந்தது. சில படங்களிலும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் சென்று வேலை செய்தாலும் மனதில் சந்தோஷம் என்பதோ, சமாதானம் என்பதோ கொஞ்சமும் இல்லாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆசையோடும், இலட்சியத்தோடும், சினிமாவை விருப்பதோடும் ஏற்றுக்கொண்டாலும் மனதில் அமைதி இழந்தவனாக, பைத்தியக்காரனாக, பரதேசியாக ஏமாற்றப்பட்டவனாக உதாசீனப்படுத்தப்பட்;ட ஒரு பாண் துண்டாக, ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ முடியாதவனாக எல்லா இடங்களிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்ட மனதுடன் ஆத்மாவை தொலைத்து நிம்மதி இழந்தவனாக அலைந்த நாட்கள் அதிகம். வேலையேதும் செய்ய முடியாத படிக்கு என் சோம்பலும், அதீதமான கருத்துக்களும் மாயை தந்து திருப்தி படுத்த பார்த்தது. கோயில், அத்வைதம், ஞானமடைதல், ஓஷோ, மெய்யுணர்வு, யோகாசனம், தியானம் என்று பல்வேறு வழிகளிலும் புத்தியை செலுத்தினாலும் அமைதிக்கான இடம் எங்குமே புலப்படவில்லை. விரக்தி, வேதனை, தனிமை, அன்புக்காக ஏங்கும் மனத்தோடு சொல்ல முடியாத துயரத்தோடு அலைந்தேன். வேதாகமத்தில் பிரசங்கியின் வார்த்தைகள் பேசுவது போல்
ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும்
மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என்
மனதை பிரயோகம் பண்ணினேன். இதுவும்
மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறது என்று கண்டேன்.
(பிரசங்கி : 1-17)
மனதை திருப்திபடுத்தும் முயற்சியில் அலைந்த அலைச்சலில் உடலும் மனதும் தன் நிலையை இழந்து, வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் விரக்தியும், வெறுப்புணர்வும், தோல்வி மனோபாவமும் என்னை தற்கொலையை நோக்கி செலுத்திக்கொண்டிருந்த போது தான் மீண்டும் நான் அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது. மீண்டும் 8 வருட காலத்திற்கு பின்பு வீட்டிற்கு திரும்பினேன். வீடு கொஞ்சம் மன பாரத்தையும், வலியையும் தீர்த்தாலும். மறுபடியும் ஏதோ ஒரு துயரம் வருமோ என்பதற்கான நிலையுடன் திருமணம் இன்னுமொரு துயரத்தை தரும் என்பது தெரியாமலேயே அதனுள் விழுந்தேன். பசி, பட்டினி, என்ற வேதனையோடு அலைந்த நாட்களில் ஏதோவொரு தைரியம் இருந்தது. ஆனால் திருமணம் மனதின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் சுக்குநூறாக உடைத்தெரிந்தது. எல்லாம் தகர்ந்து நிர்க்கதியான நிலையில் 'வெறுமை' சூனியம் சூழ நான் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணத்துடன் முன் வந்து நினறேன்.
'பதவி ஆசைக்காக உழைத்தவர் உச்சம் கண்டதில்லை!
பணத்திற்காக உழைத்தவர் வரவும் கண்டதில்லை!
மனிதனுக்காக உழைத்தவர் மகிழ்ச்சி கண்டதில்லை!
ஸ்தாபனங்களுக்காக உழைத்தவர் சமாதானம் பெற்றதில்லை!
கொள்கைக்காக உழைத்தவர் பலன் கண்டதில்லை!
இம்மையில் நன்மை தேடி உழைத்தவர் பரிசுகள் பார்த்ததில்லை!
கிறிஸ்துவின் நாமத்திற்காக உழைத்தவர் பயம் அறிந்ததில்லை!
நி;த்திய பாக்கியத்திற்காக உழைத்தவர் வெட்கம் அடைந்ததில்லை!
(நன்றி: விஷ்வவாணி சஞ்சிகை)
வாழ்க்கையை தொடர்ந்தும் நரகமாக்கிக்கொண்டதன் முடிவாகத்தான் திருமண உறவு அமைந்தது. உணர்வுகளையெல்லாம் அது தாக்கி தன்மையை நோக்கி என்னை அழைத்து சென்ற போது இயேசுவின் அன்பு மாத்திரம் தான் என்னுள் இருந்த பாரத்தை இறக்கி வைக்க உறுதுணையாக கிடைத்த இறுதி சரணாகதி. கிட்டத்தட்ட இயேசுவோடு என் உறவு பல வருடங்களாக தொடர்ந்து வந்திருந்த உணர்வை ஆண்டவர் என்னை தொட்ட போது உணர்த்தினார். இதுவரை கண்டிராத சமாதானம் உலகின் பெயரால் ஏற்படவில்லை. தேவனின் பெயரால் ஏற்பட்;டது. தேடி வந்து அன்பு செய்த தேவன் எனக்குள் இரட்சிப்பை தந்தார்.
இதனால் நான் சந்தித்திராத பெரிய பலத்த சந்தோஷம், நிம்மதி, சமாதானம் எனக்குள் பற்றிப் படர்வதையும் என் துக்கங்கள் எல்லாம் சந்தோஷமாக மாறுவதையும் என் இருதயம் சந்தோஷத்தின் வாசலில் நின்றும் என் தகப்பனின் என்றும் மாறாத அன்பின் தழும்பில் மூடிக்கொள்வதையும், இரட்சிப்பின் மகிமையையும் என்னால் எப்படி வார்த்தைகளில் சொல்லி விட முடியும். இயேசுவின் பரிசுத்த அன்புக்கு முன்பு மனித வார்த்தைகளும், மொழிகளும், அருகதையற்று போவதை நான் பல்வேறு தருணங்களில் அடைக்கப்பட்ட ஸ்தம்பிதமான மனோநிலையுடனும், கண்ணீர் பெருக்கெடுக்கும் அந்த தேவ அன்புக்கு முன்பு என் எல்லா நியாயங்களும் தேவனிடம் சரணாகதி அடைகின்றது.
' உனக்குண்டான எல்லாவற்றையும் விட்டு விட்டு வெறுங்கையனாக என்னிடம் வா. நான் எனது விலையேறப்பெற்ற இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த அந்த இரட்சிப்பை உனக்கு இலவசமாக தருகிறேன்!' என்ற இயேசுவின் வார்;த்தைகள் சத்தியத்தின் ஒளி. இருளின் குழந்தைகளாக வாழும் பாவிகளின் மீட்பர் இயேசு.
தொடரும்......