சாமானியனின் மனதோடு
ஒவ்வொரு கனமும் முண்டியடித்து
எழுந்திருப்பதில் காயங்களை
நண்பர்களுக்கு தருவதோடு
தினப்படி வாடிக்கையாகி விட்டது
என் மன வழக்கமாகி வருவதை
தடுத்து விட முடியாத விஷ ஜந்துக்களை
நான் ஏன் வளர்த்து வருகிறேன்
என்பது எனக்கும் பரியவில்லை...
நான்
தடுமாறிய நிமிசங்களில்
என் கால்கள் மட்டுமல்ல
சக பயணியின் செருப்பும்
அறுந்து போவதை என்னால்
ஏனறிய மனமில்லை...
ஒரு நிமிசம்
போர்களில் வீரியம்
சாலையெங்கும் உயிரின் வலியை
தாங்காது உடைப்பெடுக்கும்
குளத்தின் நீரில்
நனைவது ஏனோ என்
சந்தோசமற்ற சின்ன மனசுதான்
தோழனே....!
எத்தனை முறை என்
காயங்களை குணப்படுத்தியுள்ளாய்
ஆனாலும் எப்படிதான்
நீ என்னை சகித்துக் கொள்கிறாய்
சகோதரா...?
உன்னிருந்து நான்
அன்பை தவிற எதை
நான் கற்பது தோழனே...
அன்பை கற்பது இத்தனை
கடினமானதென்று இப்போதுதான்
அறிகிறேன்...
அன்பே இல்லாத
என்னிடம் நீ
எப்படியெல்லாம் அன்பை
பரிமாறுகிறாய்....
இருத்தலின் வலியை
மறக்க வைக்காத
என் உள்ளோடும் நாடாவில்
கண்ணீருடன் கனத்த
ஹிருதயத்தையும்
நீ தினம் தினம் எனக்கு
தந்து விடுகிறாய் நண்பா...
மௌனம் அறுக்கும்
அன்பைப்பற்றி பேசாத நாளில்
உயிரின் வலியை சுவாசிக்கதான்
உன்னுடன் பேச
மறுக்காத இந்த தினங்கள்
என் வாழ்க்கை பள்ளியில்
நீயும் எனது ஆசானாக ஆகி
போகிறாய்..
நான்தான் இயேசுவோடு கூட நடந்தும்
உன் அன்புக்கு முன்பு
பரி்சையில் தோல்வியுற்ற
கடைசி பெஜ் மாணவனாக...
எதுவரையோ என்னது வரையோ....!!!
000
(முஷர்ரப் முதுநபீன் என்ற என் நண்பனுக்கு.....)