Saturday, May 14, 2011
Tuesday, May 10, 2011
மஜித் மஜீதி: சினிமாவில் சூபி மொழியை பேசும் ஒரு ஆன்மீக கலைஞன்
majidi majidi
“BARAN” என்ற திரைப்படம் ஒரு சூபி மகானின் நினைவு குறிப்பிலிருந்துதான் தொடங்குவதாக எனக்கு தோன்றுகிறத. இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் அது நமது தேடலின் துாண்டலை தொடங்குவதற்கான உந்துதலை தந்தப்படியே இருக்கின்றது. இந்த உன்னதமான திரைகாவியம் சினிமா மொழியில் ஒரு நவீன கவிதை ஏற்படுத்தும் விபரிக்க தெரியாத உணர்வுகளை ஏற்படுத்து கின்றது.
வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத இந்த அற்புத காவியத்தை செதுக்கியவர் மஜித் மஜீதி என்கிற ஈரானிய திரைமேதை.
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் 1959ம் ஆண்டு மஜித் மஜீதி பிறந்தார் புதிய ஈரானிய சினிமாவில், தனித்துவமான புகழ் பெற்றவர்களில் மிக முக்கியமான இயக்குனர் மஜித் மஜீதி தெஹ்ரானில் வளர்ந்த அவர் தனது 14வது வயதிலேயே அமைச்சுர் நாடக குழுக்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் தெஹ்ரானில் உள்ள நாடக கலை தொடர்பான கல்வி நிறுவனம் ஒன்றில் சேர்ந்து பயின்றார் ஈரானில் 1978ல் நடைப்பெற்ற உலகில் மிக முக்கிய மக்கள் புரட்சிகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு திரைப்படங்களின் பாத்திரமேற்று நடிக்கும் சூழல் அவருக்கு வாய்த்தது அதன் பின்பு சினிமா அவரின் வாழ்வின் மறுபகுதியாக மாறியது.
பல்வேறுவகைப்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார். இவர் முதன் முதலில் எழுதி இயக்கிய திரைப்படமான டீயுனுருமு (1991) 1992ம் ஆண்டில் கேன்ஸ் (ஊயுNNநுளு) திரைப்பட விழாவில் இயக்குனர்களுக்கான இருவார் சிறப்பு பிரிவில் கீழ் திரையிடப்பட்டதுடன், ஏராழமான தேசிய விருதுகளையும் அவருக்கு பெற்று தந்ததோடு, அவரை இயக்குனராக உலகிற்கு இனம் காட்டியது அவரது இரண்டாவது திரைப்படமான குயவாநச 1996 சென் செபஸ்டியன் திரைப்பட விழாவில் ஜுரி விருதைப்பெற்றது. இத்திரைப்பத்தின் கதையாடலும், பாரசிக இசையும் வாழ்வை அனுகிய விதமும் மிகவும் தனித்துவமானது.
அம்மாவின் இரண்டாம் கணவனாக வரும் ஒரு பொலிஸ் அதிகாரிக்கும் மகனுக்குமான மனபோராட்டம் எப்படி ஒரு நிலையில் எல்லாம் முடிவுக்கு வருகின்றது என்பதை மஜித் மஜீதி தனக்கே உரிய கவிதை மொழியில் திரைச்சட்டகத்தில் செதுக்கி செல்லும் உயிர்ப்பு நன்மை திகைக்கசெய்கின்றது. அதிகாரமும் திமிரும், கோபமும் மனிதனின் ஆன்மீக வெளிகளை இல்லாமல் செய்து விடுவதை ஒரு பக்கம் விபரித்தாலும், அன்பு மட்டும்தான் மனிதனின் ஜீவியத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் என்பதோடு, இந்த திரைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் ருஷ்ய மகா கலைஞன் தஸ்தாயெவ்ஸ்கி சொல்லி சென்ற வாக்கு மூலம் தான் நினைவுக்கு வருகின்றது. “சந்தோசத்தை போலவே வேதனையும் மனிதனை சித்தப்படுத்துகிறது…” என்பதாக ”தந்தை” திரைப்படம் சொல்லும் முக்கிய செய்திகளும் இதுதான் மனிதனாள் பெறமுடியாததும் தொலைக்க முடியாததும் அன்பு மட்டும் தான் அன்பு தான் எல்லாமே என்பதை பற்றிதான் இவரின் இந்த திரைப்படமும் பேசுகின்றது. இவரின் சினிமா மொழி மலர்ந்த ரோஜாவை போல் தனித்துவமானது. பணியில் புத்த கனகாமரப்புக்களை போல் மனிதனின் ஆழ்மன வெளிகளில் என்றும் மறக்காத தடங்களை ஏற்படுத்த வல்லது. இவரின் திரைப்படங்களை ஒருவன் பார்க்க தொடங்கி விட்டால், பின்பு என்றுமும் மற்ற சினிமாக்கள் அவனுள் அவனை தொலைக்காது.
மஜீதி, மொண்ரியல் உலகத் திரைப்பட விழாவில் அமெரிக்க கிராண்ட்பிரிக்ஸ்” விருதை ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வென்றுள்ளார். அவ்விழாவில் 1997ல் அவரது சிறப்பான திரைப்படமான (சொர்க்கத்தின் குழந்தைகள்) முதல் முறையாக அப்பரிசை வென்றது. உலகத்தில் பத்து சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று என்றுதான் சொல் தோன்றுகின்றது. இந்த திரைப்படம் நமது பார்வையாளர்களுக்கு இரு வேறு விதமான
நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஒன்று நல்ல சினிமா என்றால் என்ன என்பதற்கான விளக்கத்தையும், ஞானத்தை யும்” சொல்லி தருவதோடு “மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு காகிதமும் பென்சிலும் எப்படி எளிதாகக் கிடைக்கிறதோ அது போல சினிமா என்று சாத்தியமாகிறதோ, அந்த நாளில்தான் அது சாமன்யமனிதனின் கலை வடிவமாக அங்கிகரிக்கப்படும்.” என்று பிரெஞ்சு திரைப்பட இயக்குனர் ழான் காத்து கனவு கண்டது போல் பார்வையாளனையும் படைப்பாளியாக மாற்றிவிடும் சாகா வரம் பெற்ற படைப்பு இது. இந்த திரைப்படத்தை தான் நான் எனது திரைப்பட காட்சிகளில் ஒழுங்கு செய்யும் போது எப்போதும் முன்னிரிமை கொடுத்து திரையிடுவதுண்டு, நமது நாட்டில் இந்த திரைப்படத்தை பல்வேறு வகையினருக்கும் பல்வேறு இடங்களிலும் மல்டிமீடியோ புரஜெக்டர் மூலமாக திரையிட்டு காட்டி கலந்துரையாடலின் போது மற்க்காத சில அற்புதமான வார்த்தைகளையும், நல்ல சினிமா மேல் நம் மக்கள் வைத்திருக்கும் பரஸ்பரமான அன்பையும் அபிமானத்தையும் கண்டு திகைத்திருக்கிறேன்.
இத்திரைப்படத்தை பள்ளி உயர்தர மாணவர் களுக்கும், ஆசிரியர்களும் திரையிட்டு காட்டிய போது “தாங்கள் வாழ்நாளில் இப்படியொருதிரைப்படத்தை பார்த்தில்லை என்றும் இப்படியெல்லாம் கூட திரைப்படங்கள் இருக்கின்றதா என்று வியந்து நமது தமிழக சினிமா ஏற்படுத்தியிருக்கும் மாய வலை பின்னலையும், நம்மை மந்தைகளாக வைத்திருக்கும் சூழலையும் குறித்து பேசி ஆதங்கத்தை தெரிவித்தார்கள்.
மஜித் மஜீதியின் (சொர்க்கத்தின் குழந்தைகள்) திரைப்படம் அமெரிக்க பல்கலைகழகத்திலும் மெக்ஸிகோ, மற்றும் ஜப்பானிய பல்கலைக்கழகத்திலும் திரைப்படத்துறை சம்பந்தமான பாட திட்டத்தில் ஒரு பாடமாக அதன் திரைக்கதை இணைக்கப்பட்டிருக்கின்ற செய்திகளோடு, சினாவில்; நடக்க இருக்கின்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய ஒரு குறும்படத்தை உருவாக்கி தருவதற்கு சீன அரசாங்கம் மஜித் மஜீதை வரவேற்றிருக்கின்றது. அப்படம் அவர் தற்சமயம் செய்து வருகின்ற படம்.
மஜீதி 1999ல் the color of paridise (சொர்க்கத்தின் நிறம்) என்ற திரைப்படத்திற்கு இரண்டாவது முறையாகவும் “அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ்” விருதை பெற்றார்கள் இப்படமும் அவரின் மனித நேயத்தையும், சூபி வாழ்வில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த தேடலையும் வெளிப் படுத்தினாலும், அன்பின் சுவரோவியங்களாக இப்படம் கண்கள் குருடான ஒரு சிறுவனின் வண்ணங்களையும், வாழ்க்கையையும் உயிரை உறுக்கும் வகையில் பேசிய திரைப்படம் . இந்த திரைப்படம் ஒன்றை மட்டும் பார்ப்பவர்களால் கண் தெரியாத, குருடர்களையும் விளம்பு மனிதர்களையும் கருணையுடனும், அன்புடனும் உலகத்தை, வாழ்வை தன்னை நேசிக்க தொடங்கி விடுவார்கள் சொர்க்கத்தின் நிறம் கண் இருந்தும் குருடர்களாக வாழும் மனிதர்களின் வண்ணத்தை மாற்றக் கூடிய திரைப்படம்.
மூன்றாவது முறையாகவும் “அமெரிக்க கிராண்ட் பிரிக்ஸ்” விருதை டீயுசுயுN என்ற திரைப்படமும், ஹங்கேரிய திரைப்படமான வுழுசுணுழுமு (கைவிடப்பட்டவர்கள்) என்ற திரைப்படத்தின் இயக்குனர் அர்பாட் சாப்சிட்சுடன் மஜித் மஜீதி பகிர்ந்து னொண்டார். சொந்த நாட்டிலேயே ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள டீயுசுயுN நீய10யார்க்கில் செப்படம்பர் 11ல் நிகழ்ந்த சம்பவங்களின் காரணமாக ஒரு சிறப்பான அர்த்தம் பெற்று அந்த ஆண்டின் மிகுந்த வெற்றிகரமான திரைப்படமாகவும் பல்வேறு சிறந்த விருதுகளை இப்படம் அள்ளி குவித்தது. இத்திரைப்படம் மூன்று தளங்களில் செயல்படுகிறது. ஈரானின் பலவீனமான பொருளாதாரத்தில் ஆப்கானிய அகதிகளின் சுமை காரணமாக ஏற்படும் உண்மையான சமூக பொருளாதார பிரச்சினை குறித்த ஒரு கதை@ மோசமான அரசியலுக்குப் பலியான இரு இளம் உள்ளங்களுக்கு இடையிலான ஒரு நம்பிக்கை ஏற்படுத்தாத காதல் கதை. ஆன்மாவின் துாய்மையை அடைவதற்கான பாதையை சுயதியாகத்தின் மூலமே எட்ட முடியும் என்பதை நுட்பமாக சொல்லும் ஒரு சூபித்துவ தேடலுக்கான கதை என்பதாக அமைகின்றது.
பரான் தலைப்பிற்கு இரு பொருள் உள்ளது. ஒரு பெண்ணின் பெயராகவும் பெர்சியா (பாரசீகம்) மொழியில் “மழை” எனவும் பொருள்படுகிறது. அம்மழை என்பது பரான் ஈரானை விட்டுச் செல்லும், லதீப் ஆன்ம முதிர்ச்சியை அடையும் வசந்த காலத்தின் ஒரு குறியீடாக உள்ளது. அவர்கள் பிரியும் அந்தக் கணத்தில், லதீப் ஈரானை நோக்கி திரும்பிச் செல்லும் முன், மழை நீர்த்துளிகள் களி மண்ணில் பதிந்துள்ள பாரனின் புறாக்களும் தீனி கொடுத்த பொழுது கேட்ட மென்மையான புறாக்களின் சிறகொலி மீண்டும் பரான் பர்தாவை அணிந்து கொள்ளும் பொழுது ஒலிக்கிறது, லத்தீப்பால் என்றென்றும் அவளை மீண்டும் பார்க்க இயலாது. ஆனால் அவளது நினைவு ஆத்மாவிற்கு வழிகாட்டும் ஒரு ஒளியாக அவனுள் நிரந்தரமாக கலைத்திருக்கும்…. என்ற காவிய பாஷையுடன் பரானின் தாக்கம் என் இருதயத்தில் இன்னும் இருக்கின்றது. இதுபோன்ற மிகவும் அற்புதமான திரைப்படத்தை வாழ்வில் இனியும் பார்க்க கிடைக்குமா என்ற சந்தேகத்தோடு அன்மையில் எனக்கொரு மின் அஞ்சல் வந்திருந்தது, அதன் தலைப்பு இதுதான் “ஆயிரம் திரைப் படங்களை பார் அதன் பின்பு சாகு” என்பதாக இருந்தது. என் மனம் சொல்லி கொண்டது. கிட்டதட்ட எனது மரணம் கூட விரைவாக வருவதென்றால் எனக்கு கவலை இல்லை ஏனென்றால் ஏரத்தாழ ஆயிரம் நல்ல சினிமாவை பார்த்த எனது திருப்தி என ஆத்மாவை சாந்தியடைய செய்யும் என்று நம்புகிறேன், ஆகவே நல்ல சினிமாவை பார்க்காமல் மரணம் தேடும் நபர்களை நினைத்து பெரிதாக கவலையடைகிறேன். வாழ்வில் ஒரே ஒரு தரமாவது நல்ல சினிமாவை தேடி சென்று பாருங்கள் அது உங்கள் வாழ்வின் மகத்தான மறக்க முடியாத நிமிடங்களாக கருணங்களாக மாறும் என்று உறுதியாக எழுதி வைப்பதோடு, முக்கியமாக மஜித் மஜீதியின் இந்த கட்டுரையில் விபரித்த நான்கு திரைப்படங்களும் அதிஷ்டவசமாக கொழும்பில் தமிழ் உப தலைப்புடன் வடிவில் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரிலிருக்கும் பாம்லீஃப் இஸ்லாமிய உணவகத்தில் கிடைக்கிறது. புறக்கோட்டை நடைபாதை கடைகளின் இரைச்சலில் நாம் அலைந்து எவ்வளவோ தேவையும், தேவையற்றதுமான பொருட்களை வாங்கி குவிக்கின்றோம், ஆனால் இந்த பொருட்களுடன் நாம் எந்த விதமான நெருக்கத்தையும் பாராட்டுவதில்லை, ஆனால் சூபிமகானான இயக்குனர் மஜித் மஜீதியின் இந்த திரைப்படங்களை வாங்கும் உங்களின் வாழ் நாளில் ஆத்மாவின் தொலைந்து போன சங்கீதத்தை தேடி கண்டடைவீர்கள் என்பதை அவரின் சூபி மொழியில் மழையில் நனையம் ஆத்மாவை சினிமாவின் மூலம் நம்மை நமக்கு அருகாமையில் கொண்டு வருவதோடு, நாம் “அன்பு” பற்றிய தொலைந்த புல்லாங்குழலை தேடி தருவதோடு, நம்மை புல்லாங்குழவன் ஆத்மீக இசையினால் அவரின் உன்னதமான திரைப்படங்கள் பூக்கும் ப10வை போல வைத்திருக்கும்.
நன்றி:வீரகேசரி
மன்னியுங்கள் என் ப்ரியங்களே...!
சாமானியனின் மனதோடுஒவ்வொரு கனமும் முண்டியடித்துஎழுந்திருப்பதில் காயங்களைநண்பர்களுக்கு தருவதோடுதினப்படி வாடிக்கையாகி விட்டதுஎன் மன வழக்கமாகி வருவதைதடுத்து விட முடியாத விஷ ஜந்துக்களைநான் ஏன் வளர்த்து வருகிறேன்என்பது எனக்கும் பரியவில்லை...நான்தடுமாறிய நிமிசங்களில்என் கால்கள் மட்டுமல்லசக பயணியின் செருப்பும்அறுந்து போவதை என்னால்ஏனறிய மனமில்லை...ஒரு நிமிசம்போர்களில் வீரியம்சாலையெங்கும் உயிரின் வலியைதாங்காது உடைப்பெடுக்கும்குளத்தின் நீரில்நனைவது ஏனோ என்சந்தோசமற்ற சின்ன மனசுதான்தோழனே....!எத்தனை முறை என்காயங்களை குணப்படுத்தியுள்ளாய்ஆனாலும் எப்படிதான்நீ என்னை சகித்துக் கொள்கிறாய்சகோதரா...?உன்னிருந்து நான்அன்பை தவிற எதைநான் கற்பது தோழனே...அன்பை கற்பது இத்தனைகடினமானதென்று இப்போதுதான்அறிகிறேன்...அன்பே இல்லாதஎன்னிடம் நீஎப்படியெல்லாம் அன்பைபரிமாறுகிறாய்....இருத்தலின் வலியைமறக்க வைக்காதஎன் உள்ளோடும் நாடாவில்கண்ணீருடன் கனத்தஹிருதயத்தையும்நீ தினம் தினம் எனக்குதந்து விடுகிறாய் நண்பா...மௌனம் அறுக்கும்அன்பைப்பற்றி பேசாத நாளில்உயிரின் வலியை சுவாசிக்கதான்உன்னுடன் பேசமறுக்காத இந்த தினங்கள்என் வாழ்க்கை பள்ளியில்நீயும் எனது ஆசானாக ஆகிபோகிறாய்..நான்தான் இயேசுவோடு கூட நடந்தும்உன் அன்புக்கு முன்புபரி்சையில் தோல்வியுற்றகடைசி பெஜ் மாணவனாக...எதுவரையோ என்னது வரையோ....!!!000