இருப்பிடம் தவறிப்போன
தவிட்டுக் குருவியின்
தவிப்பை போல
நாளைய வாழ்வு பற்றிய
ஏக்கங்கள் எனக்கும்
தொற்றுகின்றது….உனது முடிவை மாற்றிக் கொள்ளச்
சொல்லும்
வாழ்வின் வண்ணம்
ஒபபனைகளையும்
இனைத்து தூரப்படுத்துகிறது…தீடீரென்று
காதலை முறித்து
மௌனமாகி போகும்
உனது குரல்களின்
வசீகர மர்மத்திற்கு
பின்பு மறைந்திருக்கும்
இரகசியங்களை உனது
கனவனோடும் பகிர்ந்து…
அந்நரங்மாக பெய்த
மழையின் வரிகளை உன்னால்
எப்படி மறக்க முடிகிறது…உனது இதயத்தைப் பற்றிய
மையப் புள்ளயாக எனக்கு
மட்டும் காட்டிய மச்சத்தை
பற்றிய மனது மட்டும்
மையப்புள்ளியாக அவ்வப்போது
நீர்கோடுகளை
வரைகிறது…உனது வசிகர நாட்களில்
எனது விரல்கள் தீண்டிய
குறியின் அடை மழையில்
முத்தங்களும் ஸ்பரிசங்களும்
உனது அம்மாவுக்காகவும்
அப்பாவுக்காகவும் மறந்து
போகலாம்…!!!ஆனால்
மனவெளிகளில் இருள்காட்டில்
மிருகங்களை
உனது விளையாட்டு
பொம்மைகளைப் போல
உன் உறக்கத்தை
தட்டி எழுப்பலாம்…!02
உனது மார்பு கசக்கும்
உதடுகளில்
பிம்பங்களும் நடு நெஞ்சின்
மையத்தில் உன் மச்சங்கள்
உனைப்பார்த்து
கேலி செய்து உனது
ஒழுங்கீனமான
நடவடிக்கையை
காலத்தின் இருள்கள்
உனது நிழலாக வரலாம்..?உனது பிரார்த்தனைகளும்
வழிபாடுகளும்
உயிர்ப்பற்று சிதிலமாகலாம்…பாவியுடனான வழிபாடாக
ஏதோ ஒன்றை
உனது ஆத்மா இழக்கலாம்…அல்லது
உனக்கு மறப்பதற்கு
முடிவது இலகுவானதென்றால்
அனைத்தையும்
ஒரு பஸ் பயணத்தைப் போல
மறந்து விட்டு
குழந்தைகளை மடியில்
வைத்து கொஞ்சலாம்…இன்னும் நீயும்
உன் கனவனும்
கிரிக்கெட் மெச் பார்க்கலாம…சுதர்ஷினிக்கு….
Wednesday, September 16, 2009
Sunday, September 6, 2009
Subscribe to:
Posts (Atom)