பறவைகளுக்காககாத்திருந்தேன்...நேற்றிரவு வராத விருந்தினர்சாலையெங்கும்அவர்களின் வருகையுடன்தொடர்கிறது...
நீயும் விலகி செல்வதன்
காரணங்கள் ஏதுமற்ற
அர்த்தங்களை எங்கனம் நான்
தேடுவது சொல்...
நகரங்கள் உறவுகளை முறிக்கும்
சூட்சுமத்தை மட்டும்
கற்றுத் தந்தபடி இருக்கின்றது...
படிப்பும் வாழ்க்கை செலுமையும்
ஒருவரின் தகுதிகள் மட்டுமல்ல
இன்னொருவரின் மரணங்கனை
ஏந்தி செல்லும் தந்திரங்களையும்
சக
நகர வாசிகளிடம் தினம் தினம்
நாம் கற்ற படிதான்
இருக்கின்றோம்..
தந்திரங்கள் கற்க முடியாதவன்
சாலையில் தனித்து உறங்கிக் கொண்டிருக்கின்றான்...
வீடு வாசல் ஏதுமற்று
வெறுமையுடன் சிரிக்கின்றான்
நகரத்திக் தந்திரங்களை
பார்த்து பார்த்து...
Saturday, February 28, 2009
தொடர்கிறது...
Subscribe to:
Posts (Atom)