Wednesday, November 25, 2009

உன்னைப் பற்றிய ஞாபகங்கள்....!











Align Right
















உன் நினைவுகள்
மழைத்துளிகளாக
ஈரமாகி என்
உடலெங்கும் ரணமாகின்ற...

வார்த்தைகளின் புதிர்
வெளிகளில் சுடும்
மணலில் கால்கள்
பதிய மனம் வெட்கை
அனலில் மறுபடியும்
வனாந்தரங்களில் தொலைந்த
எனது பழைய உடலைத்தேடி
பயணிக்கினறன.....

பேசும் உன் ஒற்றை
வார்த்தை
யில்
புதிர் அவிழ்க்க
முடியாத ரணங்கள்...
கவிதைகளின் வரிகளுக்குள்ளும்

அடக்க தெரியாமல்

யாரிடமும் நம் உறவைப் பற்றி

பேச துணிவற்று
தனித்து
விடப்பற்ற தீவாக அழைகிறேன்.....

"வெப்" கேமராவில் பதிந்த
உன் கண்களில் காதலை

அன்றி காட்சிகளை காண

மறுக்கின்றன என் கண்கள்...

நீ
வெகுதூரத்தில் இருந்தாலும்
மன சலனங்களில்

ரோஜாக்களின் முற்களாகவும்

மறுமுறை மல்லிகை பூக்களின்
வாசனையுடன் என்
ஒற்றை
வாசலில் வந்து வந்து

காத்திருக்கின்றாய்...


உன் நினைவுகள்
பெருக்கெடுத்து
இந்த
மழை நாளில்
உடலெங்கும்
நதிகளை
ஊற்றெடுக்க
வைக்கின்றது...

என்னைப்பற்றி
என்ன தெரியும்
என்ற
உனது கேள்விகளும்

என்னைப்பற்றிய ஏதுமற்ற

உன் மன வெற்றிடமும்

அருகிலே நம்மை
சந்திக்க
வைக்கும்
கணனியும்
இப்போதைக்கு

நம்மை இனைக்கும்
பதில்களாக
இருந்தாலும்

கடவுளின்
கைரேகை
மறுபடியும்

ஓர் தனித்து விடப்பட்ட

இரண்டு தீவகளை

ஒன்றினைக்கும் விளையாட்டில்

நாம ஏனோ கேள்ளிகளுடன்

சந்தேகங்களையும்
பேசி நடக்கின்றோம்...

வாழ்கை ஒன்றும்
பெரிதாக
இல்லாத போதும..
குற்றச்சாட்டுக்கள்
ஏதுமற்ற
என்
அடையாளங்களில்
நீயம்
உன் செல்ல
சிரிப்பும்
நம் உலகத்தில்
புன்னகையை

புதிய திசைக்கு

அழைத்து போனால்....
போதும்...


உன்
வார்த்தைகளின்

சங்கீதம் எதுவாகவும்

இருக்கட்டும்
ஆனால்...
தற்சமயம்
நான் வாசிக்கும்
உன்
புல்லாங்குழலின்

ஆத்மீக ராகம் மட்டும்

எனக்குள்

இதுவரையும்
இல்லாத
ஒர்
வர்ணஜால சிறகை தந்துள்ளது..

அது நம்பிகையையும்

ஒளியையையும்

எதிர்ப்பார்ப்பையும்

என் வீதிகளில் வலம் வர
செய்துள்ளது...
உன் கடுமையான

வார்த்தைகளினால்
என்
மன கோலங்களை
மனகோட்டையை மட்டும்

தகர்த்தி விடாதே....?

போதும்
காதலின்
மாய சுகம்

இந்த ஜென்மத்தில்

எனக்கு இவ்வளவுதான்
என்று
இறைவன் தீர்மானித்து
விட்டால்
உன்னை இப்படியே
நினைத்து
உன் கவிதைகளில்

ரசிகனாக காலத்தையும்

காதலையும்
நினைவுகளில்
சுமந்து
வாழ்ந்து
விடுவேன் பெண்ணே...!


ஆனால்...
வார்த்தைகளின்
மட்டும்
மனகோடடைகளை
தகர்த்தி விடாதே...?


சந்தோசங்களை
சொல்ல
முடியாத
வகையில்
அப்படி உள்ளன.....
உன்னைப்பற்றி ஞாபகங்கள்....

எம்.மகேந்திரன்




விழித்திருக்கும் இரவுகள்.

அரசிக்கு...



தீவாக கிடந்த
என் பாலை நிலம்
உன்னால்
அடர் மழையால்
பூக்கின்றதடி...

எங்கிருந்தாய் இவ்வளவு
காலமாக
தேசத்தை தாண்டிய நம்
காதல் மறுபடியும்
நேசத்தை தேடுகின்றது...!

உன் ஆன்மீகம் கொண்ட
காதலின் என்ஆத்மா
மறு பிறவி
அடைந்ததாகவே அறிகிறேன்...

ஏன் இந்த வாழ்க்கை
என்றே என் மனது
இதுநாள் வரை
நொன்னது பெண்னே..
ஆனால்
நீ இருப்பாய்
என்னுள் என்றும்
உயிராக என்ற போது
உனக்காக வாழ
சொல்கிறது வாழ்க்கையை...

தொலைந்திரந்த
என் கவிதை உன்னால்
உயிர்த்தெழுந்துள்ளன...
இனி நானும் நீயம் சேர்ந்து
எழுதி செல்லும்
கவிதைகள்
பிரபஞ்சத்தின் மொழியாக
நம் ஆத்மாவின் பாடலாக
ஒலிக்கவுள்ளதாக நீ
அறிவாயா காதலி...?

நீ கூறுயது போல்
ஆத்மா இழந்த எனது
இசையை உன் அன்பு
மொழிகளால்
ஒரு தாயின் பரிவுடன்
அணைக்கிறாய் கலை...

கலையரசி என் காதலின்
மொழியை மீண்டும்
என்னுள் புரிய செய்தவளே..
என்றும்
என்னையும் நீ நேசிக்கிறாய்...
என்னை நேசிக்க இந்த உலகத்தில்
நீ இருக்கின்றாய் என்ற ஒன்றே போதுமடி
உனக்காக என் ஆத்மா
ஆனந்தம் கொள்கிறது...

Thursday, November 5, 2009

இரண்டு கவிதைகள்...



உங்களை ஏன்
சந்தித்தேன் என்றிருக்கின்றதாக
நீ சொன்னதன் அர்த்தம்
நான் அறியேன்...

நம்மை
சந்திக்க வைத்தவனிடம்
நீயே கேட்டுப்பார்..!
அவர் உன்
அறைகளின் இரும்புத்திரையை
திறந்து
நம்
பூங்காவின் வழியை
உனக்கு காட்டுவார்...

நீ சொல்வாயே
நான் அப்படிதான் என்பதன்
அர்த்தம் அப்போது
புரியும்...



02



என்னை
நம்ப வேண்டும்
என்று விண்ணப்பம் செய்தேன்...
நீயோ
அதை நான் என்று
உணரும் போது
நம்புவதாக
தட்டச்சி செய்தாய்..
இப்போதாவது சொல்...
எதை உணர்ந்த பின்பு
என்னை முழுமையாக
நம்புவாய்...??

என் மனம் இப்போது
இவ்வளவு
பாழடைந்த தேவாலயமான
பின்புமா
என்னை நீ நம்பவில்லை
சொல்...?

Tuesday, October 20, 2009

உனது வார்தைகள்...



இரவும் வந்தது

நீ போகவேண்டுமென்று அடமே பிடித்தாய்
போய் வா என்று அனுப்பிய பின்
அப்படியே கிடக்கின்றன
காதலும் மனமும்
இப்போது மின்மினியும் இல்லாது..
(துா்காவின் கவிதை வரி இது)

பேசியவைகள்
இந்த உறங்கும்
இரவில்
உன் நினைவுகளை
கனவுகளாக வருடலாம்...

நீ
தட்டச்சி செய்த 'செட்' எழுத்தில்
மாயங்களை நானும் நீயும் பதிக்கவில்லை
என்பதே போதும்...
கவிதைகளின் ருசியை என் வாசலில்
விதைத்துவிட்டு நீ உறங்குகுறாய்...
உனது கல்வியை கவிகைகள்
காத்திரமாக்கும் தோழி...

உறங்கும் உன்னிடம்
அழகிய கவிதைகள் மட்டும்
உன் புகைப்பட புன்னகை
போல் என் இருள் மனதில்
வண்ண விளக்காய் எரிகிறது...
நீ
உறங்குகுறாய்...
இங்கே என்னுடன்
விழித்திருக்கிறது
இதயத்தின் வசீகரங்கள்...

Wednesday, September 16, 2009



இருப்பிடம் தவறிப்போன
தவிட்டுக் குருவியின்
தவிப்பை போல
நாளைய வாழ்வு பற்றிய
ஏக்கங்கள் எனக்கும்
தொற்றுகின்றது….

உனது முடிவை மாற்றிக் கொள்ளச்
சொல்லும்
வாழ்வின் வண்ணம்
ஒபபனைகளையும்
இனைத்து தூரப்படுத்துகிறது…

தீடீரென்று
காதலை முறித்து
மௌனமாகி போகும்
உனது குரல்களின்
வசீகர மர்மத்திற்கு
பின்பு மறைந்திருக்கும்
இரகசியங்களை உனது
கனவனோடும் பகிர்ந்து…
அந்நரங்மாக பெய்த
மழையின் வரிகளை உன்னால்
எப்படி மறக்க முடிகிறது…

உனது இதயத்தைப் பற்றிய
மையப் புள்ளயாக எனக்கு
மட்டும் காட்டிய மச்சத்தை
பற்றிய மனது மட்டும்
மையப்புள்ளியாக அவ்வப்போது
நீர்கோடுகளை
வரைகிறது…

உனது வசிகர நாட்களில்
எனது விரல்கள் தீண்டிய
குறியின் அடை மழையில்
முத்தங்களும் ஸ்பரிசங்களும்
உனது அம்மாவுக்காகவும்
அப்பாவுக்காகவும் மறந்து
போகலாம்…!!!

ஆனால்
மனவெளிகளில் இருள்காட்டில்
மிருகங்களை
உனது விளையாட்டு
பொம்மைகளைப் போல
உன் உறக்கத்தை
தட்டி எழுப்பலாம்…!

02

உனது மார்பு கசக்கும்
உதடுகளில்
பிம்பங்களும் நடு நெஞ்சின்
மையத்தில் உன் மச்சங்கள்
உனைப்பார்த்து
கேலி செய்து உனது
ஒழுங்கீனமான
நடவடிக்கையை
காலத்தின் இருள்கள்
உனது நிழலாக வரலாம்..?

உனது பிரார்த்தனைகளும்
வழிபாடுகளும்
உயிர்ப்பற்று சிதிலமாகலாம்…

பாவியுடனான வழிபாடாக
ஏதோ ஒன்றை
உனது ஆத்மா இழக்கலாம்…

அல்லது

உனக்கு மறப்பதற்கு
முடிவது இலகுவானதென்றால்
அனைத்தையும்
ஒரு பஸ் பயணத்தைப் போல
மறந்து விட்டு
குழந்தைகளை மடியில்
வைத்து கொஞ்சலாம்…

இன்னும் நீயும்
உன் கனவனும்
கிரிக்கெட் மெச் பார்க்கலாம…

சுதர்ஷினிக்கு….

Saturday, February 28, 2009

தொடர்கிறது...


பறவைகளுக்காக
காத்திருந்தேன்...
நேற்றிரவு வராத விருந்தினர்
சாலையெங்கும்
அவர்களின் வருகையுடன்
தொடர்கிறது...
நீயும் விலகி செல்வதன்
காரணங்கள் ஏதுமற்ற
அர்த்தங்களை எங்கனம் நான்
தேடுவது சொல்...
நகரங்கள் உறவுகளை முறிக்கும்
சூட்சுமத்தை மட்டும்
கற்றுத் தந்தபடி இருக்கின்றது...
படிப்பும் வாழ்க்கை செலுமையும்
ஒருவரின் தகுதிகள் மட்டுமல்ல
இன்னொருவரின் மரணங்கனை
ஏந்தி செல்லும் தந்திரங்களையும்
சக
நகர வாசிகளிடம் தினம் தினம்
நாம் கற்ற படிதான்
இருக்கின்றோம்..
தந்திரங்கள் கற்க முடியாதவன்
சாலையில் தனித்து உறங்கிக் கொண்டிருக்கின்றான்...
வீடு வாசல் ஏதுமற்று
வெறுமையுடன் சிரிக்கின்றான்
நகரத்திக் தந்திரங்களை
பார்த்து பார்த்து...